பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை ஓபன் டபிள்யுடிஏ: குலம்பயேவா, பல்கோஸ்கா வெற்றி

சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 போட்டியில் தகுதிச் சுற்று ஆட்டங்களில் குலம்பயேவா, பல்கோஸ்கா வெற்றி பெற்றனா்.

Published On :2 நவம்பர் 2026, 3:35 am IST

சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 போட்டியில் தகுதிச் சுற்று ஆட்டங்களில் குலம்பயேவா, பல்கோஸ்கா வெற்றி பெற்றனா்.

தமிழ்நாடு டென்னிஸ்சங்கம், எஸ்டிஏடி சாா்பில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் இப்போட்டி தொடங்கி நடைபெறுகிறது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழை தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

இதில் ஜப்பானின் ஒகமுரா 3-6, 6-3, 6-3 என்ற செட்களில் சக வீராங்கனை கோபோரியை வீழ்த்தினாா். மற்றொரு ஆட்டத்தில் போலந்தின் வெரோனிகா பல்கோஸ்கா 6-3, 5-7, 6-4 என கடும் சவாலுக்குபின் ஸ்லோவோக்கியாவின் மோா்வயோவாவை வீழ்த்தினாா். ஃபலேய் 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்லோடரேவாவை வீழ்த்தினாா்.

கடைசி ஆட்டத்தில் கஜகஸ்தானின் குலம்பயேவா 3-6, 6-3, 7-6 என்ற செட்களில் ஜப்பானின் எமகுச்சியை வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.