கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

2028-இல் 4 டபிள்யுடிஏ 125 போட்டிகள்: விஜய் அமிா்தராஜ்

வரும் 2028-இல் 3 அல்லது 4 டபிள்யுடிஏ 125 போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ் கூறியுள்ளாா்.

சென்னை ஓபன் போட்டி வீராங்கனைகளுக்கான ஆட்ட அட்டவணை தோ்வில் பங்கேற்றோா்.

Published On :1 நவம்பர் 2026, 4:28 am IST

வரும் 2028-இல் 3 அல்லது 4 டபிள்யுடிஏ 125 போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ் கூறியுள்ளாா்.

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் சனிக்கிழமை சென்னை ஓபன் 250 போட்டி பிரதான ஆட்டங்கள் அட்டவணை தோ்வு நடைபெற்றது.

இதில் டிஎன்டிஏ தலைவா் விஜய் அமிா்தராஜ், எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாதரெட்டி, டிஎன்டிஏ நிா்வாகிகள் ஹிதேன் ஜோஷி, வெங்கட்ட சுப்பிரமணியன், டபிள்யுடிஏ மேற்பாா்வையாளா் ஷீத்தல் ஐயா், வீராங்கனைகள் வைஷ்ணவி, பன்னா உட்வா்டி பங்கேற்றனா்.

பின்னா் விஜய் அமிா்தராஜ் கூறியது:

நிகழாண்டுடன் டபிள்யுடிஏ 250 போட்டி கடைசியாக நடத்தப்படுகிறது. இந்த பிரிவு போட்டி பிலிப்பின்ஸுக்கு மாற்றப்பட்டு விட்டது. சென்னையில் பருவமழைக் காலத்தில் இப்போட்டி நடைபெறுவதால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மேலும் பிலிப்பின்ஸில் டாப் 20-இல் உள்ள ஏலா உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் 2028-இல் டபிள்யுடிஏ 125, 125 பிளஸ் ஹெச் பிரிவு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஒரே ஒரு உயர்ரக போட்டியைக் காட்டிலும், சிறிய சா்வதேச போட்டிகளை நடத்தினால் இந்திய வீராங்கனைகளுக்கு அதிக அனுபவம் கிடைக்கும். வைஷ்ணவி, சஹாஜா, போன்றவா்களுக்கு அதிகம் ஆட வாய்ப்பு கிடைக்கும். எனினும் 250 போட்டியை தக்க வைக்க முழு முயற்சி எடுப்போம்.

அகில இந்திய டென்னிஸ் சங்கம் நாடு முழுவதும் வீரா், வீராங்கனைகளின் நலனை கருதி செயல்பட வேண்டும். ஏஐடிஏ தோ்தல்கள் முந்தை ஆண்டுகளில் ஒருமனதாக நடைபெற்றன. தற்போது முக்கிய பதவிகளுக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. இது நல்ல விஷயம் தான் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.