தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உப சன்னதிகளுக்குப் பாலாலயம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 8 உப சன்னதிகளுக்குப் பாலாலய உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது

Balalayam

பாலாலயம் - video crop

Published On :30 அக்டோபர் 2026, 12:06 pm IST

ஆண்டாள், சேனை முதன்மையார், தன்வந்திரி வலம்புரி விநாயகர், மலையாள நாச்சியார், சக்கரத்தாழ்வார், திருவடிகோயில் ஆஞ்சநேயர் மற்றும் கங்கைகொண்டான் மண்டபம் ஆஞ்சனேயர் ஆகிய 8 சன்னதிகளில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் தொடங்க பாலாலயம் நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக சுமார்

ரூ. 22 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு படிப்படியாகத் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கோயில் வளாகத்தில் அனந்த சரஸ் திருக்குளத்தின் அருகே உள்ள சக்கரத்தாழ்வார், கோயில் பிரகாரத்தில் உள்ள ஆண்டாள், சேனை முதன்மையார், தன்வந்திரி, வலம்புரி விநாயகர், மலையாள நாச்சியார், திருவடி கோயில் ஆஞ்சனேயர், கங்கை கொண்டான் மண்டபம் ஆஞ்சனேயர் ஆகிய 8 உப சன்னதிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

கும்பாபிஷேக விழா

திருப்பணி தொடங்க உள்ள நிலையில் 8 உப சன்னதிகளுக்கும் இன்று காலை பாலாலய உற்சவம் நடைபெற்றது. பாலாலய உற்சவத்தை முன்னிட்டு சன்னதிகளில் உள்ள மூலவர் விக்கிரகங்கள் துணியால் மூடப்பட்டதைத் தொடர்ந்து ஆண்டாள், மலையாள நாச்சியார், சேனை முதன்மையார் ஆகிய உற்சவ சிலைகள் கண்ணாடி மறைத்துக்கொண்டு வந்து வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து புனித நீர் கலசங்களை யாகசாலையில் வைத்து வைத்து, வேதபாராயண திவ்ய பிரபந்த கோஷ்டியினர்,கோவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓதி சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர், மேளதாளம் முழங்க வேத பாராயணம் கோஷ்டியினர் வேத மந்திரங்களை ஒலித்து வர புனித நீர் கலசம் ஊர்வலமாகக் கிளி மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

பின்னர், அத்தி மரத்தில் வரையப்பட்ட ஆண்டாள் சேனை முதன்மையார் தன்வந்திரி வலம்புரி விநாயகர் மலையாள நாச்சியார் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட படங்களுக்குக் கலச நீர் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து சிறப்புப் பூஜை செய்து பாலாலய உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாலாலய உற்சவத்தில் கோயில் நிர்வாக அறங்காவலர் உதவி ஆணையர் சீனிவாசன், திருக்கோயில்கள் ஆய்வாளர், திருப்பணிக்கு நன்கொடை வழங்கும் உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர் .

கோயிலில் நடைபெற்ற பால ஆலய உற்சவம் குறித்து கோயில் நிர்வாகம் உதவி ஆணையருமான சீனிவாசன் கூறுகையில்,

ஏற்கெனவே கோயில் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று 8 உப சன்னதிகளுக்கு ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இன்னும் ஆறு மாத காலத்திற்குள் திருப்பணிகளை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.