தென்னக அயோத்தி எனப் போற்றப்படும் ராமசாமி திருக்கோயிலில் ராமநவமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தென்னக அயோத்தி எனப் போற்றப்படும் ராமசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் ஏழு நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட பழமையான திருக்கோயிலாகும்.
இங்கு ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கிறார், ராமபிரான் சீதா தேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய மற்றும் அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க, வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் விண்ணையும் மறு கையில் ராமாயண சுவடியும் ஏந்தியபடி காட்சியளிக்கிறார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி பெருவிழா 10 நாள்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் இவ்விழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான இன்று உற்சவர் ஸ்ரீ இராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமன் சமேதராய் தேரில் எழுந்தருளத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ராமா ராமா என்று முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர்.
Summary
A chariot procession was held at the Ramaswamy Temple—revered as the "Ayodhya of the South"—on the occasion of Rama Navami. A multitude of devotees participated in the event, pulling the chariot by its ropes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

அயோத்தி ராமர் கோயிலில் சூரிய திலக தரிசனம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


