பெட்ரோல் மீதான கலால் வரியைக் குறைத்தும், டீசலுக்கு முழுமையாக ரத்து செய்தும் வெள்ளிக்கிழமை காலை மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்களை கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
இதன் காரணமாக நாளொன்றுக்கு 2.5 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகளாவிய எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்தது.
இதனிடையே, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்துவதற்கு கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த ஈரான் நாடாளுமன்றத்தில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.
கச்சா எண்ணெய் தொடர் ஏற்றத்தை அடுத்து, ப்ரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. இதனிடையே, நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், டீசலுக்கு ரூ. 3-ம் உயர்த்துவதாக வியாழக்கிழமை அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏற்றத்தை தடுக்கும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 13 கலால் வரியை ரூ. 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசலுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட்ட நிலையில், முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்களின் முயற்சி கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Excise duty reduction on petrol! Cancellation for diesel!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெட்ரோல் ரூ. 10, டீசல் ரூ. 12.50 விலை உயர்வு உண்மையா? பொய்யா? அரசு விளக்கம்

தேர்தலுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயருமா? மத்திய அரசு விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? அமைச்சகம் விளக்கம்!

கலால் வரி குறைப்பு! பெட்ரோல், டீசல் விலை குறையுமா?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

