நெல்லை நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா நான்காம் திருநாள் - 63 நாயன்மார்களுடன் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோயில் ஆணி பெருந்திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவின் நான்காம் திருநாளான இன்று சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் 4ம் திருநாள் மண்டகப்படிக்கு எழுந்தருளிச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் காலையில் நடைபெற்றது.
தொடர்ந்து மாலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். வீணை மீட்டிய திருக்கோலத்தில் வெண்பட்டு உடுத்திச் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காந்திமதி அம்பாள் சுவாமி நெல்லையப்பருக்குச் சிறப்பு அர்ச்சனை உள்ளிட்டவைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாடச உபச்சார மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், யாகசாலை பூஜைகளும் குடவரை வாயில் தீபாராதனையும் நடைபெற்று பஞ்ச மூர்த்திகளுடன் பஞ்ச வாத்தியம் இசைக்கச் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
முன்னதாக, 63 நாயன்மார்கள் பஞ்சவர்ணம் கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
On the fourth day of the Aani festival at the Nellai Nellaiyappar Temple, Lord Nellaiyappar and Goddess Gandhimathi Ambal, accompanied by the 63 Nayanmars, ascended the silver Rishaba Vahanam (bull mount) and proceeded in a street procession.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனத்தில் வீதியுலா!

திருவாடானை ஆதிரத்தினேசுவரா் கோயிலில் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன், சுவாமி வீதி உலா

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்: வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா

செங்கம் பெருமாள்கோயில் இரண்டாம் நாள் திருவிழா சுவாமி: சூரியபிரபை வாகனத்தில் ஸ்ரீவேணுகோபால சுவாமி வீதி உலா
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

