முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ரஜினிகாந்த் 173 படத்தின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

தர்மன் முதல் பார்வை போஸ்டர்.

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தின் இயக்குநர் மற்றும் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் - 2 திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தன் 173-வது படத்தில் நடிக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை முதலில் கே.எஸ். ரவிக்குமார், அவரைத் தொடர்ந்து சுந்தர். சி இயக்குவதாக இருந்த நிலையில், அவர் திடீரென விலகினார். அவரைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இந்தப் படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி, அவரும் விலகினார்.

தர்மன் முதல் பார்வை போஸ்டர்.

தர்மன் முதல் பார்வை போஸ்டர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் - அஷ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். பேட்ட திரைப்படத்துக்குப் பின்னர் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த், சென்னையில் பிரபலமாக இருந்த 5 ரூபாய் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அறுவைச் சிகிச்சை மையத்தில் சண்டைக் காட்சியில் இருப்பது போன்றும், மருத்துவர் உடையில் இருக்கும் ரஜினி தனது கையில் ரத்தக்கரையுடன் கத்தி வைத்திருப்பது போன்ற முதல்பார்வை போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

புதுமையான கதைகளில் அதிக கவனம் செலுத்தும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதனைத்தொடர்ந்து வளர்ந்து வரும் நட்சத்திரம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியையும் நல்ல வசூலையும் ஈட்டியது.

இளம் இயக்குநர் அஷ்வத்தின் இயக்கத்தில் ரஜினி மற்றும் அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால், இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Summary

After many discussions and revisions behind the scenes, the highly anticipated 'Thalaivar 173' film is finally beginning production. It is a joint production involving Kamal Haasan and starring Rajinikanth that has been among the most discussed movies in the Tamil movie industry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.