மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் பற்றி..

News image

நரசிம்ம ஜெயந்தி - video crop

Updated On :30 ஏப்ரல் 2026, 3:26 pm IST

நரசிம்மர் ஜெயந்தியையொட்டி, விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பத்திலுள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் வியாழக்கிழமை விசேஷ திருமஞ்சனம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகிலுள்ள பூவரசன் குப்பத்தில் அருள்மிகு அமிர்தவல்லி நாயகி உடனுறை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சப்த ரிஷிகளுக்காக அமிர்தவல்லித் தாயாருடன் சாந்த சொரூபியாக நரசிம்மர் காட்சியளித்த இக்கோயில் தென் அஹோபிலம் என்றும் அழைக்கப்படுகிறது.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் நரசிம்மர் ஜெயந்தியன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டில் நரசிம்மர் ஜெயந்தியான வியாழக்கிழமை (ஏப்ரல் 30) காலை7 மணி முதல் 8 மணி வரை மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம், காலை 8 மணிக்கு மூலவருக்குத் தங்கக்கவசம் சாற்றப்பட்டு ஆரத்தி நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மேல் சுமார் ஒரு டன் அளவுள்ள மதுரை மல்லி, ஓசூர் செவ்வந்தி, ஸ்ரீரங்கம் விருச்சிப்பூ, தஞ்சாவூர் தவளம் உள்ளிட்ட பூக்களைக் கொண்ட பூக்கூடைகளைப் பக்தர்கள் ஊர்வலமாகக் கொண்டு வந்து முற்பகல் 11:30 மணிக்கு லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு புஷ்பயாகம் நடத்தப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு சாற்றுமுறை முடிந்தவுடன் பக்தர்களுக்குப் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, சுவாதி நட்சத்திர தினமான மே 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணி வரை மூலவருக்குத் திருமஞ்சனமும், காலை 9 மணிக்கு மேல் சுவாதி ஹோமமும் தொடங்கி நடைபெறும். பிற்பகல் 12.30 மணிக்கு பூர்ணாஹூதியும், பிற்பகல் 1 மணிக்கு ஆரத்தி வழிபாடும் நடைபெறும்.

Summary

On the occasion of Narasimha Jayanthi, special Thirumanjanam (ritual ablutions) and special worship services were held on Thursday at the Arulmigu Lakshmi Narasimha Perumal Temple in Poovarasankuppam, Villupuram district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.