மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!

சாரங்கபாணி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

News image

சாரங்கபாணி தேரோட்டம் - video crop

Updated On :30 ஏப்ரல் 2026, 12:26 pm IST

தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேரும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், ஏழு ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலமாக விளங்கும் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும், 1,500 ஆண்டுகள் பழமையானதும், ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசன செய்யப்பட்ட தலமாக விளங்கி வருகிறது.

இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதேபோல் இந்தாண்டு கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

விழாவினை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

திருவாரூர் மற்றும் திருவில்லிபுத்தூருக்கு அடுத்தபடியாக பெரிய தேராக விளங்கி வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி - பூமிதேவி, தாயார்களுடன் சாரங்கபாணி சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். காலையிலேயே வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஏராளமானோர் வெயிலினை பொருட்படுத்தாமல் தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

இந்த தேர் 110 அடி உயரமும் - 550 டன் எடையும் கொண்டது. நான்கு பிரம்மாண்ட குதிரைகள் தேரினை இழுத்துச் செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Summary

Thousands of people participated in the chariot festival at the Sarangapani Temple in Kumbakonam, pulling the chariot by its ropes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.