வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் தர்மபுர ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாகவும், முத்துகுமார சுவாமி, தன்வந்திரியும் தனிச் சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலின் சித்திரை மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான நகரத்தார் குலதெய்வ வழிபாடு நடைபெற்று வருகிறது.
காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,ஒரத்தநாடு, கந்தர்வகோட்டை, பேராவூரணி, கீழசீவல்பட்டி, பரமகுடி,திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி தங்கள் குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றி வருகின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக வந்து தங்கள் குலதெய்வமான தையல்நாயகியை வழிபடுவது வழக்கம்.
பக்தர்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.
Summary
The worship of the family deity by the Nagarathars of Vaitheeswaran Koil was celebrated with great grandeur today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குலசேகரன்பட்டினம் கோயிலில் சுமங்கலி பூஜை

வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தாா் குலதெய்வ வழிபாடு

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


