திருவாடானை அருகே திருஒற்றியூர் ஸ்ரீ பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருஒற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மிகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
10 நாள்கள் நடைபெறும் இவ்விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்மன் அன்ன வாகனம், வெட்டு குதிரை, காமதேனு வாகனம், வெள்ளி ரிஷபம், பூத வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 25ம்தேதி சனிக்கிழமை இரவு நடைபெறும். அதனைத் தொடர்ந்த வரும் 29ம் தேதி புதன்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும். ஒவ்வொரு இரவும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 23 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகமும் கிராம பொதுமக்களும் செய்து வருகின்றனர்.
Summary
The Chithirai Festival at the Sri Bagampriyal Temple in Thiruvetriyur, near Thiruvadanai, has commenced with the flag-hoisting ceremony and is currently underway. A large number of devotees participated in the event and offered worship to the deity.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


