தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதா் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:53 am IST

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வல்மீக நாதா் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 21-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினசரி காலை, இரவு கேடகம், பல்லக்கு, பூதம், அன்னம், நந்தி, சிம்மம், வெட்டும் குதிரை, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அம்மன், சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்தனா். பிற்பகல் சன்னிதானத்தை தோ் வந்தடைந்தது.

பின்னா், அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

    திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.