கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நஞ்சன்குடி கோட்டை

கதையைப் படித்து முடித்தாலும் நம் எண்ணம் கதையைச் சுற்றியே சுழல்கிறது. கதையின் போக்கில் சுவாராஸ்யமும், எதிர்பார்ப்பும் ஏற்படுவதால் உயிர்ப்புடன் இருப்பதுபோல படிக்கும் நம்மை உணரச் செய்கிறது இந்த நாவல்.

Published On :19 அக்டோபர் 2026, 3:14 pm IST

நஞ்சன்குடி கோட்டை - பாஸ்கர்ராஜ்; பக்.193; ரூ.230; சத்யா எண்டர்பிரைசஸ், சென்னை-600 094. ✆ 90805 29054.

நூற்றாண்டுகள் பழைமையான நஞ்சன்குடி கோட்டையை சீரமைக்கும் பணி தொடங்குகிறது. கோட்டைக்குள் ஓரிடத்தில் கிணறு வெட்டத் தோண்டும்போது பூமிக்கடியில் இருந்து ஐந்தடி உயரத்தில் அழகான பெண் சிலை ஒன்று கிடைக்கிறது. அதிர்ச்சியூட்டும் விதமாக அந்தச் சிலையுடன் ஒரு எலும்புக்கூடும் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறது. இதற்குப் பின்னால் ஏதோ கதை இருக்கலாம் என மக்கள் நம்புகின்றனர்.

இந்தக் கோட்டையைப் படம் வரைவதற்காக ஒரு ஓவியன் வருகிறான். அவன் அந்தக் கோட்டைக்குள் சில இடங்களுக்குச் செல்லும்போது அந்த இடங்கள் அவனுக்கு பழக்கப்பட்ட இடங்கள்போலத் தோன்றுகிறது. அவன் அந்தச் சிலையை படம் வரைய முயற்சிக்கும்போது அது உயிருடன் இருப்பது போலவும், தன்னை அதனிடத்தில் ஈர்ப்பதுபோலவும் அந்த ஓவியன் உணர்கிறான்.

இங்கிருந்து கதை அப்படியே பூர்வ ஜென்மத்துக்குள் செல்கிறது. 500 ஆண்டுகளுக்கும் முன்பு அந்தக் கோட்டையின் சிற்பியாக இருந்து இந்தச் சிலையை செதுக்கியவன்தான் இந்த ஓவியன். அந்தக் கோட்டையின் இளவரசிதான் இந்தச் சிலை. இளவரசியின் காதலன்தான் அந்தச் சிற்பி. இவர்களின் காதல் என்ன ஆனது என்று விரிகிறது கதை.

தன் முன் ஜென்மத்துக் காதலனை இந்த ஜென்மத்தில் பார்த்துவிட்ட சிலையாக உள்ள இளவரசியின் ஆத்மா அவனைத் தன்னுடன் கொண்டு செல்ல முயல்கிறது.

அதன்பிறகு என்ன நடந்தது, ஓவியன் காப்பாற்றப்பட்டானா, சிலையுடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த எலும்புக்கூட்டின் கதை என்ன என்பதை நாவல் ஆசிரியர் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார். பூர்வ ஜென்மக் கதை என்பதால் கதையைப் படிக்கும்போது அந்த காலகட்டத்துக்கு நம்மை கதாசிரியர் கை பிடித்து அழைத்துச் செல்கிறார். கதையைப் படித்து முடித்தாலும் நம் எண்ணம் கதையைச் சுற்றியே சுழல்கிறது. கதையின் போக்கில் சுவாராஸ்யமும், எதிர்பார்ப்பும் ஏற்படுவதால் உயிர்ப்புடன் இருப்பதுபோல படிக்கும் நம்மை உணரச் செய்கிறது இந்த நாவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.