தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்தியச் சமூகப் புரட்சியின் தந்தை ஜோதிராவ் ஃபுலே

சூத்திரர்கள், தலித்துகளாக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக போராடியபோதிலும், அவர்களுக்கு இடையிலும் ஜாதி ஏற்றத்தாழ்வு ஆழமாக வேரூன்றி இருந்தது ஜோதிராவுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. இதன்மூலம் அவரின் வாழ்க்கை, சாகசங்கள் மட்டுமே நிறைந்தது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தாமல், அவருக்கும் சறுக்கல்கள் இருந்துள்ளதை நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Published On :26 அக்டோபர் 2026, 7:22 pm IST

இந்தியச் சமூகப் புரட்சியின் தந்தை ஜோதிராவ் ஃபுலே- தனுஸ் ஆதித்யன்; பக். 144; ரூ. 185; கிழக்கு பதிப்பகம், சென்னை 600 014. ✆ 95000 45609.

மராத்திய மொழியில் பூவைக் குறிக்கும் ஃபூல் என்ற வார்த்தையிலிருந்து மருவி, ஃபுலே என்கிற பெயர் நிலைத்துவிட்ட நிலையில், தலித்துகள், பெண்கள், பாமர உழைக்கும் மக்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்த்த ஜோதிராவ் ஃபுலே, அவரின் மனைவி சாவித்திரி பாய் ஆகியோரின் புரட்சி விவரிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புரட்சியைச் செய்வதற்கு அவர்கள் சந்தித்த சவால்கள், அவமானங்கள், உருவாக்கிய மறுமலர்ச்சி ஒவ்வொன்றாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அவர்கள் போராடி தொடங்கிய முதல் பள்ளி, கொடுந்துயரத்தை சந்தித்த விதவைப் பெண்களுக்காக ஃபுலேவின் வீட்டில் தொடங்கப்பட்ட காப்பகம், அவ்வாறு துயரத்தை அனுபவித்த காசிபாய் என்ற பிராமண விதவைப் பெண்ணின் குழந்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஃபுலே தம்பதியின் மகனாக தத்தெடுக்கப்பட்டது என அவர்களின் வாழ்க்கை மிக எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளது.

சமூக விடுதலைக்காக புணேயில் அவர் தொடங்கிய 'சத்தியசோதக் சமாஜ்' இயக்கம், மகாராஷ்டிரம் முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றதன் மூலம், அவர்களுக்காக எந்த அளவுக்கு ஜோதிராவ் ஃபுலே தீவிரமாக இயங்கினார், போராடினார் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.

சூத்திரர்கள், தலித்துகளாக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக போராடியபோதிலும், அவர்களுக்கு இடையிலும் ஜாதி ஏற்றத்தாழ்வு ஆழமாக வேரூன்றி இருந்தது ஜோதிராவுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது. இதன்மூலம் அவரின் வாழ்க்கை, சாகசங்கள் மட்டுமே நிறைந்தது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தாமல், அவருக்கும் சறுக்கல்கள் இருந்துள்ளதை நூலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.