மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சகலகலா வல்லவன் போஜராஜன்

பண்டைய இந்தியாவின் மத்தியப் பகுதியான மாளவ தேசத்தின் மன்னர் போஜராஜனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கிறது இந்த நூல்.

News image
Updated On :6 மே 2026, 7:16 pm IST

சகலகலா வல்லவன் போஜராஜன் - அனந்தசாய்ராம் ரங்கராஜன்; பக். 118; ரூ. 160; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 002; ✆ 81480 66645.

பண்டைய இந்தியாவின் மத்தியப் பகுதியான மாளவ தேசத்தின் மன்னர் போஜராஜனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கிறது இந்த நூல். தாராவை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த பரமார வம்சத்தின் மன்னர் சிந்துராஜாவுக்கும்- சாவித்ரிக்கும் மகனாகப் பிறந்தவர் போஜராஜன்.

1010-இல் சிந்துராஜாவின் மறைவையடுத்து, ஆட்சிக்கு வந்த போஜராஜன் மாளவத்தின் மகுடத்தில் புதிய நட்சத்திரமாக மிளிர்ந்தார். அவரது வாழ்க்கை, அப்போதைய அரசியல் சூழல், வளர்ந்த அறிவியல் சிந்தனைகள், உருவாக்கிய நிர்வாக முறைகள், போர்களின் வெற்றி-தோல்விகள், கல்விக்கான அர்ப்பணிப்பு, பெண்களுக்கான முக்கியத்துவம், நாட்டின் வர்த்தக வலிமை, நீர்ப்பாசனத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி, சைவ வழிபாட்டின் மீதான அவருடைய நம்பிக்கை உள்ளிட்ட எண்ணற்ற விஷயங்களை நூலாசிரியர் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.

கஜினி முகமதை போஜராஜன் தனது படைகளுடன் சேர்ந்து விரட்டியதும், இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்த கஜினி முகமது மாளவ தேசத்தின் மீது படையெடுக்காமல் பின்வாங்கியதையும், நாட்டின் செல்வ வளங்களை மன்னர் போஜராஜன் காப்பாற்றியதை நூலாசிரியர் விரிவாக விளக்கியுள்ளார்.

பேதவா ஆற்றின் குறுக்கே அணை கட்டியது, வெளிநாட்டு உறவுகள், வர்த்தகப் பாதைகள் உள்ளிட்டவற்றைப் பார்க்கும்போது, பத்தாம் நூற்றாண்டிலேயே உலகம் போற்றும் உன்னத ஆட்சியை போஜராஜன் நடத்தியதையும் அறிய முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.