மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஹிட்லர்

முதலாம் உலகப் போரில் சாதாரண போர் வீரனாக இருந்து டிஏபி கட்சியில் இணைந்து, அதை நாஜி கட்சியாக மாற்றி உலகையே மிரட்டிய ஹிட்லரின் வாழ்க்கை குறித்து 160 பக்கங்களில் எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 7:17 pm IST

ஹிட்லர் - ஃவாஹிம்; பக். 160; ரூ. 200; சத்யா என்டர்பிரைசஸ், சென்னை-600 094, ✆ 9080529054.

முதலாம் உலகப் போரில் சாதாரண போர் வீரனாக இருந்து டிஏபி கட்சியில் இணைந்து, அதை நாஜி கட்சியாக மாற்றி உலகையே மிரட்டிய ஹிட்லரின் வாழ்க்கை குறித்து 160 பக்கங்களில் எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் யூதர்கள் மீது வெறுப்புணர்வு கொள்ளாத ஹிட்லருக்கு வியன்னாவில் தங்கியிருந்த இறுதி நாள்களில் யூதர்கள் குறித்த புரிதல் மாறத் தொடங்கியதாக நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிட்லருக்கும் நாஜி கட்சியில் எதிர்ப்பு இருந்துள்ளது. இதனால், அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். பின்னர் ஏற்பட்ட சமாதானத்தைத் தொடர்ந்து, டிஏபி கட்சியை தன்வசப்படுத்தி கடைசி வரை அந்தக் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

தனது தாயின் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்த யூதரான எட்வர்ட் ப்ளோச்சின் குடும்பத்தை ஜெர்மனியை விட்டுத் தப்பிக்கவிட்டது, ஹிட்லருக்கு ராணுவ விருது கிடைக்க காரணமான யூத மேலதிகாரி ஹியூகோ கட்மன் தப்பித்தது போன்ற சம்பவங்கள், சில யூதர்கள் மீது சுயநலம் காரணமாக ஹிட்லர் இரக்கம் காட்டியுள்ளார் என்பது நூல் மூலம் தெரிகிறது.

ஹிட்லருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு நன்னடத்தை காரணமாக 9 மாதங்களில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் சிறைவாசத்தின்போது எழுதத் தொடங்கிய தனது வாழ்க்கை வரலாறான "மெயின் காம்ஃப்' நூல் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அந்த நூல் குறித்த முசோலினியின் கருத்து சற்று எதிர்பாராதது.

வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை, ரஷியாவில் தோன்றிய அக்டோபர் புரட்சியின் விளைவாக ஜெர்மனியில் தோன்றிய நவம்பர் புரட்சி குறித்து உலக விவகாரங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் விரிவாக வாசிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.