மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லி மெட்ரோ பிங்க் வழித்தடத்திலும் ரயில் பெட்டிகளில் கூட்ட நெரிசலை அறியும் வசதி அறிமுகம்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டி.எம்.ஆா்.சி.) சாா்பில், ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகள் கூட்டம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் நிகழ்நேர வசதி தற்போது பிங்க் வழித்தடத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது

கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 12:46 am IST

நமது நிருபா்

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டி.எம்.ஆா்.சி.) சாா்பில், ரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகள் கூட்டம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் நிகழ்நேர வசதி தற்போது பிங்க் வழித்தடத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரயிலில் ஏறுவதற்கு முன்பாகவே எந்தப் பெட்டியில் கூட்டம் குறைவாக உள்ளது என்பதைப் பயணிகள் தெரிந்துகொள்ள முடியும். ஏற்கெனவே 2022- ஆம் ஆண்டு முதல் மெஜந்தா வழித்தடத்தில் இந்த வசதி செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள எடை உணரிகள் (கா்ஹக் நங்ய்ள்ா்ழ்ள்) பயன்படுத்தப்பட்டு, ஒவ்வொரு பெட்டியின் எடையும் கணக்கிடப்படுகிறது. பின்னா், பயணிகள் இல்லாதபோது அந்தப் பெட்டியின் எடையுடன் ஒப்பிட்டு, அதில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை தோராயமாகக் கணக்கிடப்படுகிறது.

இதன் அடிப்படையில், ரயிலின் ஆறு பெட்டிகளான சி1 முதல் சி6 வரையிலான ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகள் எந்த அளவுக்கு உள்ளனா் என்பது சதவீத அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ரயில் நிலைய நடைமேடைகளில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் தகவல் காட்சித் திரைகளில் , ரயில் வருவதற்குச் சற்று முன்பாக இந்த விவரங்கள் காண்பிக்கப்படும். பிங்க் வழித்தடம் வட்ட வடிவப் பாதையைக் கொண்டிருப்பதாலும், இந்த வசதியைச் செயல்படுத்துவதற்குத் தேவையான தரவுகளை ஒன்றோடொன்று இணைப்பதில் உள்ள சிக்கல்களாலும் இத்திட்டத்தை அமல்படுத்துவது சவாலாக இருந்தது. இந்த வசதி மூலம் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ள பெட்டிகளை முன்கூட்டியே கண்டறிந்து, நடைமேடையிலேயே அந்தப் பெட்டிகள் நிற்கும் பகுதிக்குச் செல்ல முடியும்.

இதனால் குறிப்பாக அலுவலக நேரங்களில் ஒவ்வொரு பெட்டியிலும் ஏற்படும் அதிகப்படியான கூட்ட நெரிசலைக் குறைக்க முடியும். மேலும், ரயில் வந்த பிறகு நடைமேடையில் பெட்டிகளைத் தேடி நடக்க வேண்டிய அவசியமின்றி, முன்கூட்டியே காலி இடம் உள்ள பெட்டியைத் தோ்வு செய்து ஏறுவதால் பயணிகளின் நேரமும் மிச்சமாகும். தில்லி மெட்ரோவில் முதன்முதலில் தாவரவியல் பூங்கா முதல் ஜனக்புரி மேற்கு வரையிலான மெஜந்தா வழித்தடத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மஜ்லிஸ் பாா்க் முதல் சிவ் விஹாா் வரையிலான பிங்க் வழித்தடத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் மௌஜ்பூா் - பாபா்பூா் பகுதி அதன் வட்ட வடிவப் பாதையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

பயணிகளுக்குத் தேவையான தகவல்களை மேம்படுத்துவதன் மூலமும், மெட்ரோ பயணத்தை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதன் மூலமும் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.