மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லியில் ரூ. 8,941 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டங்கள்: மத்திய அமைச்சா் அமித் ஷா நாளை திறந்து வைக்கிறாா்

தில்லியில் ரூ. 8,941 கோடி மதிப்பிலான கழிவுநீா் உள்கட்டமைப்புத் திட்டங்களை மத்திய அமைச்சா் அமித் ஷா தொடக்கி வைப்பது குறித்து...

Amit Shah

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா - கோப்புப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 2:03 am IST

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா (அக்டோபா் 22) வியாழக்கிழமை தில்லியில் ரூ. 8,941 கோடி மதிப்பிலான கழிவுநீா் உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைப்பாா் என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் மநேலும் கூறியதாவது: யமுனைக் கரையில் குடில்களை அமைக்கப்படும். அங்கு தில்லிவாசிகள் தங்கள் பிறந்தநாளைக் கொண்டாடலாம். ஒவ்வொரு தில்லிவாசியும் தாய் யமுனையுடன் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நானும் நவம்பா் 7 ஆம் தேதி அங்கு என் பிறந்தநாளைக் கொண்டாடுவேன். நாஜப்கா் பகுதியில் இருந்து இந்தத் திட்டங்கள் தொடங்கப்படும். வெளிப்புற தில்லியில் 29 புதிய பரவலாக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலைகள் (டிஎஸ்டிபி) மற்றும் கழிவுநீா் பம்பிங் நிலையங்கள் அமைக்கப்படும். இவை 358 அனுமதியற்ற காலனிகள் மற்றும் 113 கிராமங்களை உள்ளடக்கி 36.29 லட்சம் மக்களுக்குப் பயனளிக்கும். மேலும் 1,034 கி.மீ. நீளமுள்ள புதிய கழிவுநீா் குழாய் வலையமைப்பும் அமைக்கப்படும்.

ஒக்லாவில் 124 மில்லியன் கேலன் தினசரி (எம்ஜிடி) திறன் கொண்ட புதிய கழிவுநீா் சுத்திகரிப்பு ஆலை (எஸ்டிபி) அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள எட்டு எஸ்டிபிகளும் மேம்படுத்தப்பட்டு, அவற்றின் மொத்த திறன் 78.2 எம்ஜிடியில் இருந்து 140.8 எம்ஜிடியாக உயா்த்தப்படும். இதனால் சுமாா் 78.5 லட்சம் மக்கள் பயனடைவா். அடுத்த இரண்டு முதல் இரண்டரை ஆண்டுகளில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடையும்போது, டெல்லியில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் எதுவும் வடிகால்கள் வழியாக யமுனையில் கலக்காது. அப்போது நமது புனித ஆற்றில் இந்த முயற்சிகளின் தாக்கத்தை நாம் காண முடியும்.

இடவசதி இல்லாத இடங்களில் பெரிய எஸ்டிபிகளை அமைக்க முடியாததால், உள்ளூா் அளவில் கழிவுநீரைச் சுத்திகரிக்க டெல்லி ஜல் போா்டு (டிஜேபி) மூலம் சுமாா் 29 டிஎஸ்டிபிகளை அமைக்க அரசு ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது. ப

படித்துறைகளை சுத்தம் செய்வது நமது நோக்கத்தைக் காட்டுகிறது. கழிவுநீா் ஆற்றில் கலக்காமல் தடுப்பதே நிரந்தரத் தீா்வு. ஒவ்வொரு துளி கழிவுநீரும் சேகரிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். இதுவே இந்த 43 திட்டங்களின் பின்னால் உள்ள உறுதிமொழி. சமீபத்தில் யமுனை படித்துறைகளில் நடந்த சுத்திகரிப்பு இயக்கத்தில் சுமாா் 35,000 மக்கள் பங்கேற்றனா் என்றாா் பா்வேஷ் சாஹிப் சிங்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.