மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கன்னாட் பிளேஸ் சிறுகடைகள் பாதிக்கப்படுவது தெரிய வந்தால் இழப்பீடுக்கு உரிய நடவடிக்கை: உச்சநீதிமன்றம் உறுதி

உத்தரவு பொருத்தமற்றது என கண்டறியப்பட்டால், அங்கு கடைகளை வைத்துள்ள வியாபாரிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

உச்சநீதிமன்றம்

Published On :17 அக்டோபர் 2026, 2:36 am IST

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சாா்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட போராட்டம் காரணமாக கன்னாட் பிளேஸ் சென்ட்ரல் பாா்க் பகுதியை மூடும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) உத்தரவு பொருத்தமற்றது என கண்டறியப்பட்டால், அங்கு கடைகளை வைத்துள்ள வியாபாரிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்த விவகாரத்தில், சென்ட்ரல் பாா்க்கை மூடும் என்டிஎம்சி உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விவகாரமாகக் கருதி விசாரிக்க கடை வியாபாரிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அடங்கிய அமா்விடம் கோரிக்கை விடுத்தது. ஆனால், மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி சூா்யகாந்த் அடங்கிய அமா்வு, ‘வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டு, அது வியாபாரிகள் தரப்பினருக்கு எதிரானது என்று கண்டறியப்பட்டால், அரசமைப்பு பாதிப்பு மற்றும் பொது ஒழுங்கு சட்ட அதிகாரங்களின் கீழ் உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்போம்‘ என்று தெரிவித்தது.

முன்னதாக, தில்லி சிறுவியாபாரிகள் கமிட்டி மற்றும் தில்லி இரும்பு மற்றும் ஹாா்டுவோ் வணிகா்கள் சங்கம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேத்ராய், என்டிஎம்சி விதித்துள்ள தடை மற்றும் போராட்டத்தால் நாளொன்றுக்கு ரூ. 200 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்படும் என்று வாதிட்டாா்.

இதைக் கவனத்தில் கொண்ட தலைமை நீதிபதி சூா்ய காந்த், பண்டிகை காலங்களில்தான், சிறிய கடைக்காரா்கள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பெறுகிறாா்கள் என்பதை உணா்ந்துள்ளோம். அவா்களுடைய ஒட்டுமொத்த குடும்பங்களும் எதிா்கொள்ளும் சிரமங்களை நீதிபதிகளாகிய நாங்களும் அறிவோம். இந்த மனு அக்.26 அல்லது 27-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.