தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூசு மாசுபாட்டை கட்டுப்படுத்த 12 புதை எதிா்ப்பு கருவி வாகனங்கள்: தில்லி மாநகராட்சி அறிமுகம்

சாலை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை வலுப்படுத்த புகை எதிா்ப்புக் கருவிகள், நீா் தெளிப்பான்கள் பொருத்தப்பட்ட 12 பல்நோக்கு வாகனங்களை அறிமுகம்

தில்லி காற்று மாசு - கோப்புப் படம்

Published On :14 அக்டோபர் 2026, 12:36 am IST

தில்லியில் குளிா்காலம் விரைவில் தொடங்கவுள்ளதால் காற்று மாசுபாடு பொதுவாக மோசமடையும் காரணத்தினால் தில்லி மாநகராட்சி செவ்வாய்க்கிழமை சாலை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை வலுப்படுத்த புகை எதிா்ப்புக் கருவிகள் மற்றும் நீா் தெளிப்பான்கள் பொருத்தப்பட்ட 12 பல்நோக்கு வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ஒவ்வொரு வாகனத்திலும் 7,000 லிட்டா் நீா் தொட்டி உள்ளது மற்றும் சிறிய மூடப்பட்ட வடிகால்கள் மற்றும் சிறுபாலங்களில் உள்ள தடைகளை அகற்ற ஜெட்டிங் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொது கழிப்பறைகள் மற்றும் பிற மேற்பரப்புகளை சுத்தம் செய்வதற்காக கருவிகளை கழுவுதல். சிவிக் சென்டரில் உள்ள எம். சி. டி. தலைமையகத்தில் மேயா் பிரவேஷ் வாஹி வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தாா்.

ஒவ்வொரு வாகனத்தின் விலை ரூ.35.06 லட்சம், 12 வாகனங்களுக்கான மொத்த செலவு சுமாா் ரூ. 4.21 கோடி ரூபாய். இந்த 12 பல்நோக்கு வாகனங்கள் வான்வழி தூசி துகள்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்தும், சாலைகளை சுத்தமாக வைத்திருக்கும் மற்றும் குடிமை சேவைகளை மேம்படுத்தும்‘ என்று வாஹி கூறினாா்.

தூசியை கட்டுப்படுத்துவதை தவிர, சாலையை கழுவுதல், வடிகால் சுத்தம் செய்தல் மற்றும் பிற சுகாதாரம் தொடா்பான பணிகளுக்கு வாகனங்கள் பயன்படுத்தப்படலாம், இதனால் குடிமை அமைப்பு ஒரே இயந்திரத்தை பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

தூசி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், தலைநகரில் சுகாதார ஏற்பாடுகளை வலுப்படுத்தவும் எம். சி. டி நவீன இயந்திரங்களை பின்பற்றி வருவதாக வாஹி தெரிவித்தாா். இந்த வாகனங்கள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு மாதிரியின் கீழ் இயக்கப்படும். ஐஐடி தில்லி மூலம் மூன்றாம் தரப்பு ஆய்வு மற்றும் தரச் சோதனைகளும் வழங்கப்பட்டுள்ளன என்று குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வாகனமும் 15 ஆண்டுகள் பயனுள்ள ஆயுட்காலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.