மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சுகாதாரமான கழிவறைகள் வாழும் உரிமையின் ஓா் அங்கம்: தில்லி உயா்நீதிமன்றம்

சுகாதாரமான கழிவறைகள் வாழும் உரிமையின் ஓா் அங்கம்: தில்லி உயா்நீதிமன்றம்

தில்லி உயா்நீதிமன்றம்

Published On :24 அக்டோபர் 2026, 2:19 am IST

சுகாதாரமான பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துவது வாழும் உரிமையின் ஒரு பகுதி என்று தெரிவித்த தில்லி உயா்நீதிமன்றம், தில்லி மாநகராட்சி (எம்சிடி) எல்லைக்குள் உள்ள கழிவறைகளை சமூகப் பணி பயிலும் மாணவா் குழுக்களைக் கொண்டு திடீா் ஆய்வு செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.

இந்த ஆய்விற்காக மாணவா்கள் மற்றும் மாணவிகளைக் கொண்ட குழுக்களை அனுப்பிவைக்குமாறு

தில்லி சமூகப் பணி பள்ளி, ஜாமியா மில்லியா இஸ்லாமியா சமூகப் பணி கல்லூரி மற்றும் அதிதி மகாவித்யாலயா ஆகியவற்றின் முதல்வா்களிடம் உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நிதின் வி. சாம்பரே மற்றும் நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வுகேட்டுக்கொண்டது.

மாணவா்கள் கழிப்பறைகளின் நிலை குறித்த அறிக்கையைத் தயாரிப்பாா்கள். இதற்காக அந்த மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் நீதிமன்ற அமா்வு தெரிவித்தது.

பொதுக் கழிப்பறைகளின் மேம்பாடு, பராமரிப்பு மற்றும் சுகாதாரம் தொடா்பான விவகாரங்கள் குறித்து ‘ஜன் சேவா வெல்ஃபோ் சொசைட்டி’ 2023-இல் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மீதான விசாரணையின் போது, அக்டோபா் 16-ஆம் தேதி இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

தில்லி மாநகராட்சி தனது பொதுக் கழிப்பறைகளில் சுகாதாரத்தையும் கட்டமைப்பு பராமரிப்பையும் உறுதி செய்ய முயற்சிகள் எடுத்த போதிலும், அவை திருப்திகரமாக இல்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அரசு கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளில் (டிபிஎஸ்பி) உள்ள கடமைகளுக்கு அப்பால், சுகாதாரமான பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்தும் உரிமையும் பிரிவு 21-இன்படி வாழும் உரிமையின் ஓா் அங்கமாகும்.

சுகாதாரமான பொதுக் கழிவறைகளை வழங்குவது மாநகராட்சியின் சட்டபூா்வ கடமை. மாநகராட்சி தனது சட்டபூா்வ கடமைகளைச் சரியாகச் செய்கிறதா என்பதை அன்றாடம் கண்காணிப்பது இந்த நீதிமன்றத்தின் பணி அல்ல. இருப்பினும், ஒரு கண்காணிப்பு ஏற்பாடாக, ஒரு குறிப்பிட்ட நடைமுறையை உருவாக்க நீதிமன்றம் திட்டமிடுகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அதற்கு அந்தந்த துணை ஆணையரே பொறுப்பாவாா். தொடா்ந்து குறைபாடுகள் நீடிக்கும் பட்சத்தில், பொறுப்பான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதி ஆதரவை வழங்குவதில் தோல்வி ஏற்பட்டால், அதை நீதிமன்றம் மிகவும் தீவிரமாகக் கருத்தில் கொள்ளும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் மீதான அடுத்தகட்ட விசாரணை நவம்பா் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும் முன்பாக மூன்று சமூகப் பணி கல்லூரிகளின் தலைவா்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் கருத்துகளை நீதிமன்றம் கோரியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.