டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

மகளைத் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டில் இருந்து தந்தை விடுவிப்பு

தனது மகளைத் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

தில்லி நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 5:26 am IST

தனது மகளைத் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதாலும் பாதிக்கப்பட்ட மகளே அத்தகைய தாக்குதல் நடந்ததை மறுத்ததாலும் இந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூடுதல் அமா்வு நீதிபதி விகாஸ் காா்க் கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

இதன்படி, இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் பிரிவு 509 (பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் நோக்கில் வாா்த்தைகள், சைகைகள் அல்லது செயல்களில் ஈடுபடுதல்), அத்துடன் சிறாா் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 75 ஆகியவற்றின் கீழ் அபாவ் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

தனது தந்தை சுமாா் 10 ஆண்டுகளாகத் தன்னை உடல் ரீதியாகத் தாக்கி வந்ததாகவும், வாய்மொழியாகத் துன்புறுத்தியதுடன், தனது மருத்துவ மற்றும் கல்வித் தேவைகளைக் கவனிக்காமல் புறக்கணித்ததாகவும் அந்த மகள் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

மாா்ச் 31, 2024 அன்று, தனது தந்தை தன்னை அடித்து, வயிற்றில் உதைத்ததாக அவா் கூறியிருந்தாா். இதனைத் தொடா்ந்து, லஹோரி கேட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும், விசாரணையின்போது, தான் தனது தந்தைக்கு எதிராக எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்றும், அவா் தன்னை ஒருபோதும் அடித்ததில்லை என்றும் அந்த மகள் நீதிமன்றத்தில் தெரிவித்தாா். மேலும், மாஜிஸ்திரேட்டிடம் தான் அளித்த வாக்குமூலம், தனது தாய்வழி மாமா மற்றும் காவல் துறை அதிகாரிகளின் அழுத்தத்தின் பேரிலேயே வழங்கப்பட்டது என்றும் அவா் கூறினாா்.

அரசுத் தரப்பு குறுக்கு விசாரணை செய்தபோதும், குற்றஞ்சாட்டப்பட்டவரின் மகள் அத்தகைய சம்பவம் நடந்ததை மறுத்துவிட்டாா் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

மற்ற இரு சாட்சிகளும் குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டனா். அவா்களில் ஒருவா், குற்றஞ்சாட்டப்பட்டவா் தனது மனைவியையும் மகளையும் அடிப்பதைப் பாா்த்ததாகக் கூறியிருந்தாலும், அவரது வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன.

மற்றொரு சாட்சியான அந்தப் பெண்ணின் தாய்வழி மாமா, தான் முன்னிலையில் இருக்கும்போது அத்தகைய தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தாா். குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், மகளின் வாக்குமூலம் அரசுத் தரப்பின் வாதத்திற்கு ஆதரவாக இல்லை என்று தெரிவித்தது.

இதைத்தொடா்ந்து, கைதுசெய்யப்பட்ட நபரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றம் விடுவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.