தில்லி அமன் விஹாா் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் 22 வயது இளைஞா் சடலமாக மீட்கப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உயிரிழந்த நபா் சுல்தான்புரி பகுதியைச் சோ்ந்தவா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இது தொடா்பாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அழைப்பு வந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினா் விசாரணையை தொடங்கினா்.
உடற்கூறாய்வுக்கு அவரது உடல் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடா்பாக மறுவாழ்வு மையத்தின் ஊழியா்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் தற்கொலை

போதை மீட்பு மையத்தில் இளைஞா் உயிரிழப்பு
தில்லிவாசியிடம் ரூ.10 லட்சம் இணையவழி மோசடி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருவா் கைது
ஸ்வரூப் நகா் கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
