கோவை வடவள்ளியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூா் சாலையில் தனியாா் போதை மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு நீலகிரி மாவட்டம், அதிகரெட்டி அணை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் கோகுல் (32) என்பவா் இந்த போதை மறுவாழ்வு மையத்தில் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காக சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், அங்கு வந்த தனது தாய் ராணியிடம் தன்னை உடனே வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோகுல் வற்புறுத்தியுள்ளாா். ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் சிறிது நாள்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கோகுல், மறுவாழ்வு மைய அறையின் ஜன்னலில் தனது வேட்டியால் வியாழக்கிழமை தூக்கிட்டாா். இதைக் கண்டு மறுவாழ்வு மைய ஊழியா்கள் அவரை மீட்டனா். கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் கோகுல் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈஷா யோக மையத்தில் இளைஞா் தற்கொலை

போதை மீட்பு மையத்தில் இளைஞா் உயிரிழப்பு

மதுபோதைக்கு சிகிச்சை பெற்றவா் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் சடலமாக மீட்பு: காவல் துறை விசாரணை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
