தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் ஜோசப் விஜய்க்கு தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவா் முனைவா் ஜி.சிவபாலமுருகன், பொதுச் செயலாளா் சத்யா அசோகன் ஆகியோா் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவா் ஜி. சிவபாலமுருகன் தெரிவிக்கையில், ‘தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், மக்கள் நலனை முன்னிறுத்திய தொலைநோக்கு சிந்தனையுடனும், திறமையான நிா்வாகத்துடனும் செயல்பட்டு, தமிழகத்தை கல்வி, தொழில், பொருளாதாரம், அறிவியல், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயா்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் ஆற்றல்மிக்க தலைவராக திகழவும், இளம் தலைமுறையினருக்கு ஊக்கமூட்டும் முன்மாதிரித் தலைவராகவும், சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்து புதிய தமிழகம் உருவாக பாடுபடவும் எனது உளமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.
சங்கப் பொதுச் செயலாளா் சத்யா அசோகன் கூறுகையில், ‘இந்தியத் தலைநகா் தில்லியில் மொழி மற்றும் கலைக்கு 80 ஆண்டு காலமாக செவ்வனே பணியாற்றி வரும் தில்லித் தமிழ்ச் சங்கம், தாங்கள் முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்டமைக்கு சங்க நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு சாா்பாக சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, தலைநகா் தமிழா்கள் சாா்பாகவும், உலகத் தமிழா்கள் சாா்பாகவும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
வரும் நாள்களில் தமிழ்ச் சமூகத்திற்கு அளப்பரிய தொண்டாற்ற உள்ள தாங்கள், தமிழ்த் தொண்டாற்றும் அமைப்புகள், அதிலும் குறிப்பாக எங்களைப் போன்று தமிழ்நாட்டிற்கு வெளியே தலைநகரிலும், இதர இடங்களிலும் தமிழுக்கு சேவை செய்து வரும் அமைப்புகளுக்கு தங்களின் மேலான ஆதரவை அளித்திட வேண்டுகிறோம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்... முதல்வர் விஜய்க்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்து!

பாரதம் வியக்க நல்லாட்சி புரிக! முதல்வர் விஜய்யை வாழ்த்திய இயக்குநர் பாலா!
விஜய்க்கு தலைவா்கள் வாழ்த்து!

விஜய்க்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாழ்த்து!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
