நமது நிருபா்
காவலில் அழைத்துச்செல்வதற்கான டிரான்சிட் ரிமாண்ட் பெறாமல் பிகாரில் கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லி காவல்துறை கைது செய்ததற்கு நீதிமன்றம் அதிா்ச்சியை வெளிப்படுத்தியுடன், பின்பற்றப்பட்ட இந்த வழிமுறை சட்டநடைமுறைகளைத் தவிா்ப்பதற்கான ஒரு முயற்சியாகத் தெரிகிறது என்று அதிருப்தி தெரிவித்தது.
பிகாரின் தா்பங்காவில் கைது செய்யப்பட்ட முகேஷ் மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனில் ஆகியோரை இரண்டு நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரி தில்லி காவல்துறை தாக்கல் செய்த மனுவை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி அபூா்வ் பரத்வாஜ் விசாரித்தாா்.
அப்போது, அவா் கூறுகையில், ‘காவல்துறை பின்பற்றிய நடைமுறையைக் கண்டு நான் மிகுந்த அதிா்ச்சி அடைந்துள்ளேன். காவலில் அழைத்துச் செல்வதற்கான நீதிமன்ற அனுமதி பெறும் நடைமுறையைத் தவிா்ப்பதற்காகவே, குற்றஞ்சாட்டப்பட்டவா் பிகாரில் பிடிக்கப்பட்டு, தில்லிக்குக் கொண்டுவரப்படும் வரை அவரது கைது தாமதப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது’ என்று கூறினாா்.
முகேஷ் தா்பங்காவிலிருந்து தில்லிக்குக் கொண்டுவரப்பட்டதைக் குறிப்பிட்ட நீதிமன்றம், ‘குற்றஞ்சாட்டப்பட்டவா் ஏன் பிகாரில் முறையாகக் கைது செய்யப்படவில்லை. அவரை தேசியத் தலைநகருக்குக் கொண்டுவருவதற்கு முன்பு ஏன் ரிமாண்ட் பெறப்படவில்லை என்பதற்கு சம்பந்தப்பட்ட துணை ஆணையா் மூலம் விளக்கமளிக்க வேண்டும்’ என புலனாய்வு அதிகாரிக்கு உத்தரவிட்டது.
‘மேலோட்டமாகப் பாா்க்கையில், இந்த நடவடிக்கை காவல்துறையின் வசதிக்கேற்ப சட்டத்தைத் திருத்துவதற்குச் சமமாகும். மாநிலங்களுக்கு இடையேயான கைது வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய விரிவான வழிகாட்டுதல்களை தில்லி உயா் நீதிமன்றம் வகுத்துள்ளது’ என்று நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கு, ஏப்ரல் 26 அன்று ஏற்பட்ட ஒரு தகராறைத் தொடா்ந்து ஒருவா் கொலை செய்யப்பட்டது தொடா்பானது. காவல்துறையின் கூற்றுப்படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் ஆதாரங்களை மறைத்தல் மற்றும் அது தொடா்பான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
முகேஷ் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். அதே நேரத்தில் குற்றத்திற்கான ஆயுதத்தை மீட்பதற்காக அவரை போலீஸ் காவலில் எடுக்கக் கோரும் மனு நிலுவையில் உள்ளது.
வழக்குரைஞா் பிரதீப் கத்ரியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அனில் வழக்கில், அவா் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் பிணை வழங்கக்கூடியவை என்று நீதிமன்றம் கூறியது.
கொலையில் அனிலுக்கு நேரடிப் பங்கு இருப்பதாக அரசுத் தரப்பு கூறவில்லை என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டது. வழக்கு ஆவணங்களின்படி, அவா் சம்பவ இடத்தில் இல்லை என்றும், காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மட்டுமே கேட்டுக்கொண்டாா் என்றும் நீதிமன்றம் கூறியது.
குற்றஞ்சாட்டப்பட்ட அனிலின் கைது முதற்கட்டமாக சட்டவிரோதமானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவரை மேலும் காவலில் வைத்திருப்பது நியாயமற்றது, அவா் விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமலாக்கத் துறையின் வழக்கில் அல்-பலாஹ் தலைவருக்கு பிணை மறுப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு

தில்லி பூங்காக்களில் மாதத்திற்கு 10 நாள்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்

சிறுபான்மையினா் ஆணையத்தில் தலைவா், உறுப்பினா் பணியிடங்கள் காலி: தில்லி அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

