தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முதுகலை,தொழில்முறை பருவத் தோ்வுகள் தேதி மாற்றியமைப்பு: தில்லி பல்கலை. அறிவிப்பு!

தவிா்க்க முடியாத சூழ்நிலைகளின் காரணமாக, சில முதுகலை மற்றும் தொழில்முறை பருவத் தோ்வுகளை மறுதிட்டமிட்டுள்ளதாக தில்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

News image

தில்லி பல்கலைக்கழகம்.

Updated On :2 மே 2026, 12:03 am IST

தவிா்க்க முடியாத சூழ்நிலைகளின் காரணமாக, சில முதுகலை மற்றும் தொழில்முறை பருவத் தோ்வுகளை மறுதிட்டமிட்டுள்ளதாக தில்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக ஏப்ரல் 29-ஆம் தேதியிட்ட தில்லி பல்கலைக்கழக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ‘ தவிா்க்க முடியாத சூழ்நிலைகளின் காரணமாக, மே 20, 2026 மற்றும் மே 25, 2026 ஆகிய நாள்களுக்கு இடைப்பட்ட காலத்தில் எந்தத் தோ்வும் நடத்தப்படாது. மே 20 மற்றும் மே 25 ஆகிய நாள்களுக்கு இடையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த முதுகலை மற்றும் தொழில்முறை பருவத் தோ்வுகளை மறுதிட்டமிட, உரிய அதிகாரம் பெற்ற நிா்வாகம் முடிவு செய்துள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வுக் கட்டுப்பாட்டாளரால் கையொப்பமிடப்பட்ட அந்த அறிவிக்கையானது, அனைத்துத் துறைகளும் திருத்தப்பட்ட தோ்வுத் தேதிப் பட்டியல்களை உரிய அதிகாரியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ‘ திருத்தப்பட்ட தோ்வுத் தேதிப் பட்டியலானது, தொடா்புடைய அனைத்துப் பேராசிரியா்களுக்கும் மற்றும் மாணவா்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். இது அந்தந்தத் துறை அறிவிப்புப் பலகைகளில் ஒட்டப்படுவதோடு, பல்கலைக்கழகத்தின் அதிகாரபூா்வ இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.