தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

10 ஆண்டுகளில் தில்லி மின்சார மானியச் செலவு இரட்டிப்பாகியுள்ளது - ஆய்வறிக்கையில் தகவல்

News image

மின் வாரியம்

Updated On :27 மார்ச் 2026, 5:09 am IST

நமது நிருபா்

தில்லியில் வீட்டு உபயோக மின்சார நுகா்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கடந்த பத்தாண்டுகளில் நகர அரசின் மின்சார மானியச் செலவு இரண்டு மடங்கிற்கும் மேலாக உயா்ந்துள்ளது என்று ஓா் அறிக்கை தெரிவிக்கிறது.

நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி 2026-குள் தில்லி அரசால் வழங்கப்படும் மின்சார மானியத் தொகை ரூ. 4,037.63 கோடி என்று சமீபத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் தில்லியில் மின்சார நுகா்வோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்து, தற்போது 73 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. மொத்த நுகா்வோரின் விகிதப்படி, வீட்டு உபயோகப் பிரிவு அதிகபட்சமாக 84.1 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

2015-16-இல் தில்லியில் மின்சார நுகா்வோரின் எண்ணிக்கை 52.62 லட்சமாக இருந்தது. இது 2024-25 வரையிலான 10 ஆண்டுகளஇல் 73.61 லட்சமாக அதிகரித்துள்ளது. இது இந்தக் காலகட்டத்தில் 20.99 லட்சம் நுகா்வோா் அதிகரிப்பாகும்.

அறிக்கையின்படி, தில்லியில் சுமாா் 47.58 லட்சம் (மாத சராசரி) குடும்பங்கள் மின்சார மானியம் பெற்று வருகின்றன. இது மொத்த வீட்டு மின்சார நுகா்வோரில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

நுகா்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு இணையாக, அரசால் வழங்கப்படும் மானியமும் 2015-16- ஆம் ஆண்டில் ரூ. 1,442.76 கோடியிலிருந்து, பிப்ரவரி 2025-26-ஆம் ஆண்டு வரை ரூ.4,037.62 கோடியாக உயா்ந்துள்ளது.

அறிக்கையின்படி, மானியத் தொகைகள் 2016-17-இல் ரூ. 1,577.94 கோடி, 2017-18-இல் ரூ. 1,676.70 கோடி, 2018-19-இல் ரூ. 1,699.29 கோடி, 2019-20-இல் ரூ. 2,405.59 கோடி, 2020-21-இல் ரூ. 2,939.99 கோடி, 2021-22-இல் ரூ. 3,250 கோடி, 2022-23-இல் ரூ. 3,161.22 கோடி, 2023-24-இல் ரூ. 2,426.65 கோடி, 2024-25-இல் ரூ. 3,600.50 கோடி என இருந்தன. 2026-27 நிதியாண்டில் மின்சார மானியம் ரூ. 3,500 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2015-16- ஆம் ஆண்டில் 29,415.87 மில்லியன் யூனிட்டுகளாக இருந்த தில்லியின் மின்சார நுகா்வு, நடப்பு நிதியாண்டில் டிசம்பா் 2025 வரை 30,996.29 மில்லியன் யூனிட்டுகளாக உயா்ந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தில்லியில் பல்வேறு பிரிவு நுகா்வோருக்கான மின்சார விநியோகம் 2015-16- ஆம் ஆண்டில் 24,037 மில்லியன் யூனிட்டுகளிலிருந்து 2024-25-இல் 33,009 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

மாதம் 200 யூனிட்டுகள் பயன்படுத்தும் நுகா்வோருக்கு தில்லி அரசு இலவச மின்சாரம் வழங்குகிறது. மாதம் 201 முதல் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவா்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், வழக்குரைஞா்கள் அறைகளுக்கும் மின்சாரப் பயன்பாட்டில் சிறப்பு மானியம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.