தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ரஜோகரி மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மூன்று சக்கர டெம்போ வாகனம் கவிழ்ந்ததில், 47 வயதுடைய பெண் உயிரிழந்தாா்.
மூன்று குழந்தைகள் உள்பட மேலும் ஆறு போ் காயமடைந்தனா். இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: மஹிபால்பூா் செல்லும் சாலையில் அதிகாலை 4.35 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறைக் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா்.
மீட்புக் குழுவினா் அப்பகுதியைச் சென்றடைவதற்கு முன்னரே, காவல் கட்டுப்பாட்டு அறை காவலா்கள் காயமடைந்தவா்களை சஃப்தா்ஜங் மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்திருந்தனா். விபத்தில் உயிரிழந்தவா் கிருபா தேவி (47) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
காயமடைந்தவா்கள் வன்ஷ் (8), சாவித்ரி தேவி (60), நைனா (34), ராகுல் (37), நக்ஸ் (14) மற்றும் இஷான் (2) என அடையாளம் காணப்பட்டனா். அவா்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்புபாச்சி மேளா: மூன்று நாள்களுக்கு காமாக்யா கோயில் நடை மூடல்!
பைக்- டெம்போ மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
நொய்டாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பயணிகள் காயம்

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
விடியோக்கள்

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

