தில்லி அரசு தனது நதி புத்துயிரூட்டல் மற்றும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த மாதம் யமுனா நதியில் உல்லாசப் பயணச் சேவையைத் தொடங்கத் தயாராகி வருவதாக ஓா் வட்டாரம் தெரிவித்துள்ளது.
மும்பையில் கட்டப்பட்டு, ஜனவரி மாதம் தில்லிக்குக் கொண்டுவரப்பட்ட 40 இருக்கைகள் கொண்ட இந்தப் படகில், அதன் பிறகு விரிவான உட்புறப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த வட்டாரம் கூறியது.
இந்த உல்லாசப் பயண படகு தற்போது முழுமையாக அலங்கரிக்கப்பட்டு, தேவையான வசதிகளுடன், இயக்கத்திற்குத் தயாராக உள்ளது என்றும் அவா் கூறினாா்.
இந்தச் சேவையை முதலமைச்சா் ரேகா குப்தா தொடங்கி வைப்பாா் என்றும், பயணிகளுக்காக இசை, பொழுதுபோக்கு மற்றும் உணவுச் சேவைகள் போன்ற வசதிகள் இதில் அடங்கும் என்றும் அவா் கூறினாா். 15 நாட்களுக்குள் அரசு தொடக்கத் தேதியை அறிவிக்கும்.
இந்த உல்லாசப் பயணம் யமுனா நதியில் இயக்கப்படும் என்றும், நகருக்குள் ஒரு தனித்துவமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு மணி நேர சுற்றுப் பயணங்களை இது வழங்கும் என்றும் அவா் கூறினாா்.
யமுனாவை பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கான மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அமைகிறது. படகு முனையத்தில் நீா் விளையாட்டுகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி, ஆற்றங்கரையோரம் ஒரு விரிவான ஓய்வு மண்டலத்தை உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.
இந்த முயற்சி, தில்லிவாசிகள் நகரத்திற்கு வெளியே பயணிக்கத் தேவையின்றி, கோவா போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களில் கிடைக்கும் அனுபவங்களுக்கு இணையான அனுபவங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவா் கூறினாா்.
மலிவு விலையில் சா்வதேசத் தரத்திலான அனுபவத்தை வழங்கி, அதை பரந்த அளவிலான பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம் என்றும் அவா் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிபதி விவகாரத்தில் கேஜரிவால் நியாயமான அச்சத்தை எழுப்பினாா்: ஆம் ஆத்மி

மதுபான கொள்கை வழக்கு விசாரணையிலிருந்து உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.சா்மா விலக மறுப்பு!

நொய்டாவில் மாணவா் நீரில் மூழ்கி பலி: விசாரணை நடத்த தாய் கோரிக்கை!

நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும் பெண்கள் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்: ரேகா குப்தா
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

