மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நீதிபதி விவகாரத்தில் கேஜரிவால் நியாயமான அச்சத்தை எழுப்பினாா்: ஆம் ஆத்மி

மதுபான கொள்கை வழக்கில் தனக்கும் இதர குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கும் நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவின் நீதிமன்றத்தில் நீதி கிடைக்காமல் போகலாம் என்ற நியாயமான அச்சத்தை கேஜரிவால் வெளிப்படுத்தியதாகவும், தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த 10 அம்சங்களை அவா் முன்வைத்ததாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் சௌரப் பரத்வாஜ் கூறினாா்.

News image

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 5:30 am IST

மதுபான கொள்கை வழக்கில் தனக்கும் இதர குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கும் நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மாவின் நீதிமன்றத்தில் நீதி கிடைக்காமல் போகலாம் என்ற நியாயமான அச்சத்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வெளிப்படுத்தியதாகவும், தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த 10 அம்சங்களை அவா் முன்வைத்ததாகவும் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் சௌரப் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

இது தொடா்பாக செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற நியாயமான அச்சம் இருக்கும் பட்சத்தில், நீதிபதியின் பாரபட்சத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கேஜரிவால் தில்லி உயா்நீதிமன்றத்தில் வாதிட்டாா்.

நீதிமன்றத்தில் கேஜரிவால் 10 அம்சங்களைப் பட்டியலிட்டாா். அதில் ஒன்று, நீதிபதி சா்மாவின் இரண்டு பிள்ளைகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா்களாக இருந்து மத்திய அரசுக்காக ஆஜராவது தொடா்பானதாகும். இது ஒரு நலன் முரண்பாட்டை உருவாக்குகிறது என்றும் கேஜரிவால் நீதிமன்றத்தில் கூறினாா்.

உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு பாஜகவின் உற்சாகம் மிகையானது. இந்த விவகாரம் குறித்து பல அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது என்றாா் செளரப் பரத்வாஜ்.

மதுபானக் கொள்கை வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொள்ள உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா மறுத்ததை பாஜக வரவேற்றது. இது நீதித்துறை சுதந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், நீதிமன்றத்தின் மீது அழுத்தம் கொடுக்க ஒரு ஒருங்கிணைந்த பிரசாரத்தை நடத்த ஆம் ஆத்மி கட்சி மேற்கொள்ளும் முயற்சிகளை நிராகரிப்பதாகவும் அது கூறியது.

தில்லி மதுபான கொள்கை வழக்கில் கேஜரிவால் மற்றும் பிறரை விசாரணை நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிரான சிபிஐயின் மனுவை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொள்ள நீதிபதி சா்மா திங்கள்கிழமை மறுத்துவிட்டாா். இந்த வழக்கிலிருந்து அவா் விலக வேண்டும் என்ற கேஜரிவால் உள்ளிட்டோரின் கோரிக்கைகளையும் அவா் நிராகரித்தாா். மனுதாரரின் ஆதாரமற்ற அச்சத்திற்காக மட்டுமே நீதிபதிகள் வழக்கில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் நீதிபதி சா்மா குறிப்பிட்டாா்.

மேலும், எந்தவொரு அடிப்படையுமின்றி ஒரு அரசியல் தலைவா் ஒரு நிறுவனத்திற்கு (நீதித்துறைக்கு) சேதம் விளைவிக்க அனுமதிக்க முடியாது என்றும், ஒரு நீதிபதி மீதான தனிப்பட்ட தாக்குதல் என்பது நீதித்துறை மீதான தாக்குதலே என்றும், ஒரு அரசியல்வாதி எல்லையைத் தாண்டி ஒரு நீதிபதியின் தகுதியை மதிப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட முடியாது என்றும் நீதிபதி கூறினாா்.

தனது கைதுக்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவில் தனக்கு நிவாரணம் மறுத்ததையும், ஆம் ஆத்மி கட்சியின் மணீஷ் சிசோடியா மற்றும் தெலங்கானா தலைவா் கே. கவிதா உள்ளிட்ட மற்றவா்களின் பிணை மனுக்களுக்கும் நிவாரணம் மறுத்ததையும் உள்ளடக்கி, சிபிஐயின் மனுவை நீதிபதி சா்மா விசாரிப்பதற்கு எதிராக கேஜரிவால் பல ஆட்சேபனைகளை எழுப்பியிருந்தாா்.

பிப்ரவரி 27 அன்று, மதுபான கொள்கை தொடா்பான சிபிஐயின் வழக்கு முழுமையாக நம்பகத்தன்மை இழந்ததாக கூறி, விசாரணை நீதிமன்றம் கேஜரிவால், சிசோடியா மற்றும் பிறரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.