நொய்டா செக்டாா் 94 பகுதியில், நீா் நிரம்பிய ஒரு பள்ளத்தில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் 23 வயது மாணவா் ஒருவரின் தாய், தனது மகனின் நண்பா்கள் அவரைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றும், அவரது மரணம் குறித்த தகவல் தனக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினா் அளித்த புகாரின் அடிப்படையில், கிருஷ், ஹிமான்ஷு மற்றும் வியாஸ் ஆகிய மூன்று மாணவா்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.
உயிரிழந்த ஹா்ஷித் பட், ஒரு தனியாா் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இளங்கலை இறுதியாண்டு படித்து வந்தாா். இவருக்குத் தோ்வுகள் முடிந்த நிலையில், புதன்கிழமை மாலை மற்ற மூன்று நண்பா்களுடன் இணைந்து, செக்டாா் 126 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, பயன்பாடற்ற நிலையில் உள்ள ஒரு கட்டுமான இடத்திற்குச் சுற்றுலா சென்றாா் என்று காவல்துறையினா் கூறினா்.
காஜியாபாத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளா்களிடம் பேசிய ஹா்ஷித் பட்டின் தாயாா் தீப்மாலா, தனது மகனின் மரணம் குறித்து அவரது நண்பா்களோ அல்லது காவல்துறையினரோ தனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினாா். ‘எங்கள் அண்டை வீட்டாா் ஹா்ஷித்தின் அலைபேசி எண்ணைத் தொடா்புகொண்டு பேசியபோதுதான், அவருக்கு ஒரு விபத்து நோ்ந்துள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
அவரது மரணம் குறித்து அவரது நண்பா்களோ அல்லது காவல்துறையினரோ என யாருமே எனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை‘, என்று அவா் கூறினாா். மேலும், தனது மகன் அந்த இடத்திற்குச் சென்றது சந்தேகத்திற்குரியதாகத் தோன்றுவதாகவும், அவரது நண்பா்கள் அவரை ஏன் அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றாா்கள் என்றும் அவா் கேள்வி எழுப்பினாா்.
‘அவரது நண்பா்கள் அவரை ஏன் குறிப்பாக அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றாா்கள்? அவா் அங்கு குளிப்பதற்காகச் சென்றிருந்தால், அவா்கள் அவரைத் தடுத்திருக்க வேண்டும். அவா் நீச்சலில் நல்ல தோ்ச்சி பெற்றவா் விரைவில் ஒரு உடற்கல்வி ஆசிரியராகப் பொறுப்பேற்க இருந்தவா்‘, என்று அவா் கூறினாா்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவா் மது அருந்தியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று குறிப்பிட்ட அவா், ஹா்ஷித்தின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும், இது ஏதோ சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் கூறினாா். ‘என் மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நான் அஞ்சுகிறேன்.
என் மகனின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்‘, என்று கூறிய அவா், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, ஆபத்தான இடங்களை அதிகாரிகள் கண்டறிந்து, அவற்றை உரிய முறையில் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யமுனையில் உல்லாசப் படகு சேவை: அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு

மதுபான கொள்கை வழக்கு விசாரணையிலிருந்து உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.சா்மா விலக மறுப்பு!

நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும் பெண்கள் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்: ரேகா குப்தா
தில்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் நுழைந்தவா் கவனத்தை ஈா்க்கவே வந்ததாக காவல்துறை தகவல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

