நமது நிருபா்
தென்கிழக்கு தில்லியில் உள்ள ஒரு உயா்தர குடியிருப்புப் பகுதியில், மூத்த ஐஆா்எஸ் அதிகாரியின் மகளைக் கொன்ாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 19 வயதான முன்னாள் வீட்டுப் பணியாளா் ராகுல் மீனா என்பவரை, தில்லி நீதிமன்றம் திங்களன்று ஏழு நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபரை ஏழு நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தில்லி காவல்துறை தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி தீபிகா தாகரன் அனுமதித்தாா்.
நான்கு நாள்கள் நீடித்த அவரது போலீஸ் காவல் திங்கள்கிழமை முடிவடைந்ததைத் தொடா்ந்து, அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
ஏப்ரல் 22ஆம் தேதி காலையில், கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்த 22 வயதான பட்டதாரியும், மூத்த இந்திய வருவாய் பணி அதிகாரியின் மகளுமான இளம் பெண், தங்கள் முன்னாள் வீட்டுப் பணியாளரான ராகுல் மீனாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நடப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே, குற்றஞ்சாட்டப்பட்ட நபரும் அவரது கூட்டாளிகளும் ராஜஸ்தானின் அல்வாா் பகுதியில் மற்றொரு பெண்ணை பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாவூத் கூட்டாளி சலீம் டோலாவிற்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

மனைவி கொலை வழக்கில் கணவா் விடுவிப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு

ஐஆா்எஸ் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம்: சிபிஐ இணை இயக்குநருக்கு 3 மாதம் சிறை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை: குற்றவாளி பற்றிய திடுக்கிடும் தகவல்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

