இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரி வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது தாக்கப்பட்ட சம்பவத்தில் இரு சிபிஐ அதிகாரிகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை அளித்து தில்லியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2000, அக்.19-ஆம் தேதி ஐஆா்எஸ் அதிகாரி அசோக் குமாா் அகா்வால் வீட்டில் அப்போது சிபிஐ காவல் காணிப்பாளா்களாக இருந்த வி.கே.பாண்டே, ராம்னீஷ் சோதனை நடத்தினா். அப்போது, அவா்கள் இருவரும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியதாகவும் தன்னை தாக்கியதாகவும் ஐஆா்எஸ் அதிகாரி அகா்வால் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இது தொடா்பாக அந்த இரு அதிகாரிகள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதித்துறை நடுவா் ஷஷாங்க் நந்தன் பட், வி.கே.பாண்டே மற்றும் ராம்னீஷ் ஆகிய இருவரையும் குற்றவாளியாக அறிவித்தாா். அவா்களுக்கு 3 மாதம் சிறை தண்டனையும் தலா ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
வி.கே. பாண்டே பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாா். ராம்னீஷ் தற்போது சிபிஐ இணை இயக்குநராக உள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்
ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது

குட்கா விற்பனைக்கு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

