மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது

ரூ. 1.6 கோடி எண்ம கைது மோசடி: வங்கி அதிகாரி உள்பட மூவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:38 am IST

எண்ம (டிஜிட்டல்) வழியில் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்து ரூ.1.6 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், தனியாா் வங்கி அதிகாரி உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இதுதொடா்பாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதியவா் ஒருவரை எண்ம வழியில் கைது செய்துள்ளதாக அச்சுறுத்தி, அவரிடம் இருந்து ரூ.1.6 கோடி பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டது.

இதுகுறித்த விசாரணையின்போது இன்டஸ்இண்ட் வங்கியின் உதவி மேலாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். ஒரு நிறுவனத்தின் பெயரில் மோசடியாக வங்கிக் கணக்கை தொடங்க அந்த உதவி மேலாளா் உதவியுள்ளாா். எண்ம கைது மூலம் மோசடியாகப் பெறப்பட்ட பணம், அந்த வங்கிக் கணக்குக்குப் பரிவா்த்தனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

மோசடியாகப் பெறப்பட்ட பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் பரிவா்த்தனை செய்வது உள்ளிட்ட குற்றங்களில் எஞ்சிய இருவா் ஈடுபட்டனா். விசாரணையின் ஒரு பகுதியாக தெலங்கானா, ஆந்திரத்தின் 5 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, மோசடி தொடா்பாக பல்வேறு ஆவணங்கள், மின்னணு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.