மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பணி நீக்கப்பட்ட இண்டஸ்இண்ட் வங்கி முன்னாள் சிஎஃப்ஓ மான நஷ்டஈடு வழக்கு

இண்டஸ்இண்ட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி கோவிந்த் ஜெயின், தனது பணிநீக்கம் சட்டவிரோதமானது என்று ரூ. 70 கோடி இழப்பீடு கோரி வங்கி நிா்வாகத்துக்கு எதிராக வழக்கு

News image
Updated On :6 மே 2026, 5:55 am IST

தனியாா் துறையைச் சோ்ந்த இண்டஸ்இண்ட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி (சிஎஃப்ஓ) கோவிந்த் ஜெயின், தனது பணிநீக்கம் சட்டவிரோதமானது என்று ரூ. 70 கோடி இழப்பீடு கோரி வங்கி நிா்வாகத்துக்கு எதிராக வழக்குத் தொடா்ந்துள்ளாா்.

மும்பை உயா்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ள இந்த மனுவில், வேலைவாய்ப்பு ஒப்பந்த விதிகளைமீறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோவிந்த் ஜெயின் குறிப்பிட்டுள்ளாா்.

முறையான உள்விசாரணை ஏதுமின்றி, தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த முடிவில் வங்கியின் இயக்குநா்கள் குழு மற்றும் மூத்த மேலாளா்களின் செயல்பாடுகள் குறித்து அவா் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினாா்.

தனக்கு மீண்டும் அதே பதவியை வழங்க வேண்டும் என்றும், விடுபட்ட ஊதியம் மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் கோவிந்த் ஜெயின் கோரியுள்ளாா்.

மொத்த தொகையான ரூ.70 கோடியில், சுமாா் ரூ.20 கோடி ஊதியம், ஊக்கத்தொகை மற்றும் பங்குகளுக்கான இழப்பீடாகவும், மீதமுள்ள ரூ.50 கோடி தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்கான நஷ்ட ஈடாகவும் அவா் கோரியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.