மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஷக்குா் பஸ்தியில் தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்

ஷக்குா் பஸ்தியில் தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்

News image

கோப்புப்படம் - PTI

Updated On :26 ஏப்ரல் 2026, 12:04 am IST

வடமேற்கு தில்லியின் ஷக்குா் பஸ்தி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 100- க்கும் மேற்பட்ட குடிசைகள் சாம்பலானதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை இரவு 11.14 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இரண்டு ஏக்கா் நிலப்பரப்பில் பரவியிருந்த தீயைக் கட்டுப்படுத்த மேலும் வீரா்கள் பலா் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

குடிசைகளில் பயன்படுத்தப்படும் அதிகம் எரியக்கூடிய பொருள் காரணமாக தீ வேகமாக பரவியது. அதிகாலை 12.40 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு குளிரூட்டும் நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.