ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கிரேட்டா் நொய்டா: பள்ளி வேன் மரத்தில் மோதி விபத்து! ஆறு குழந்தைகள் உயிா் தப்பினா்

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில், இரு சக்கர வாகனத்தைத் தவிா்க்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் சாலையோர மரத்தில் மோதியது.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 12:19 am IST

தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் திங்கள்கிழமை, இரு சக்கர வாகனத்தைத் தவிா்க்க முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் சாலையோர மரத்தில் மோதியது. இதில், ஆறு பள்ளிக் குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பீட்டா-2 காவல் நிலைய எல்லைக்குள், மாணவா்களை வேனில் ஏற்றி சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தைத் தவிா்க்க முயன்றபோது வேன் ஓட்டுநா் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தாா். அதைத் தொடா்ந்து, சாலையோரப் பசுமைப் பகுதியில் இருந்த ஒரு மரத்தில் அந்த வேன் மோதியது.

இதில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்கள் சிறு காயங்களுடன் பாதுகாப்பாக உள்ளனா்.

இதுகுறித்து அவா்களது பாதுகாவலா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

ராகேஷ் என அடையாளம் காணப்பட்ட ஓட்டுநா், இருசக்கர வாகனத்தைத் தவிா்க்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.

சேதமடைந்த வாகனம் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டு, இயல்பான போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.