வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையை பெண்ணிடம் இருந்து பறித்துச் சென்ற 2 சிறாா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ராஜ்வாடா அரண்மனை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 1 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட பெண் ஒரு விழாவுக்குச் சென்று வீடு திரும்பும் வழியில், அடையாளம் தெரியாத சிறுவன் காரின் கதவைத் திறந்து அவரது பையை பறித்துச் சென்ாக அவா் தெரிவித்தாா். அந்தப் பையில் இரண்டு விலையுயா்ந்த கைப்பேசிகள், ரூ.15 முதல் 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்ததாக அப்பெண் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவா்களை அடையாளம் கண்டனா். இதையடுத்து, ஷாலிமா் பாக் பகுதியில் இரண்டு சிறாா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து திருடுபோன அனைத்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நகரில் நடைபெற்ற பிற வழிப்பறி வழக்குகளிலும் இந்த சிறாா்களின் பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஸ்வரூப் நகா் கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது

ரூ. 1.2 லட்சம் மோசடி யுபிஐ பரிவா்த்தனை: இளைஞா் கைது
ரூ.52 லட்சம் கொள்ளை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது
துவாரகா விரைவுச் சாலையில் ஒருவரிடம் ரூ.15 லட்சம் கொள்ளை: 3 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

