தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தில்லிக்குள் நுழையும் வணிக வாகனங்களுக்கு திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் கட்டணம்: எம்.சி.டி. அறிவிப்பு

உச்ச நீதிமன்றத்தின் அண்மை உத்தரவுக்கு இணங்க, நகரத்திற்குள் நுழையும் வணிக வாகனங்களுக்கான திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் இழப்பீட்டு கட்டணங்களை உடனடியாக அமல்படுத்துவதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image

தில்லி மாநகராட்சி

Updated On :21 ஏப்ரல் 2026, 12:33 am IST

உச்ச நீதிமன்றத்தின் அண்மை உத்தரவுக்கு இணங்க, நகரத்திற்குள் நுழையும் வணிக வாகனங்களுக்கான திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் இழப்பீட்டு கட்டணங்களை (ஈ. சி. சி) உடனடியாக அமல்படுத்துவதாக தில்லி மாநகராட்சி (எம். சி. டி) தெரிவித்துள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாசுபடுத்தும் வாகனங்களை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட திருத்தப்பட்ட விகிதங்கள், பல்வேறு பிரிவுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த உத்தரவின் படி, வகை 2 வாகனங்கள் (இலகுரக வணிக வாகனங்கள்) மற்றும் வகை 3 வாகனங்கள் (இரு அச்சு லாரிகள்) ஈசிசி ரீ.1,400-லிருந்து ரூ.2,000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு, கட்டணங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

வகை 4 வாகனங்கள் (மூன்று அச்சு லாரிகள்) மற்றும் வகை 5 வாகனங்கள் (நான்கு அச்சு லாரிகள் மற்றும் அதற்கு மேற்பட்டவை) இப்போது ரூ.2500-த்தில் இருந்து ரூ.4000 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அதிக ஈசிசி விகிதங்களுக்கு அழைப்பு விடுத்த எம்சி மேத்தா ஸ்ள் யூனியன் ஆஃப் இந்தியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடா்ந்து இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவும் வகையில் தில்லிக்குள் நுழையும் வணிக வாகனங்களுக்கு ஈசிசி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நகரத்திற்குள் நுழையும் அனைத்து வணிக வாகனங்களுக்கும் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன, மேலும் அவை தற்போதுள்ள சுங்கச்சாவடிக்கு கூடுதலாகும். தினசரி குறைந்தது 4000 லாரிகள் தேசிய தலைநகருக்குள் நுழைகின்றன என்றும், இந்த அதிகரிப்பு குறிப்பாக கனமான மற்றும் அதிக மாசுபடுத்தும் வாகனங்களுக்கு ஒரு தடுப்பு நடவடிக்கையாக செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.