ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சரக்கு வாகனங்களுக்கு நேரக் கட்டுபாடு விதிக்கப்படுமா!

பண்ருட்டி, கும்பகோணம் சாலையில் வாகனத்தை நிறுத்தி சரக்கு இறக்கியதால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

News image

பண்ருட்டி, கும்பகோணம் சாலையில் வாகனத்தை நிறுத்தி சரக்கு இறக்கியதால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

Updated On :25 ஏப்ரல் 2026, 12:30 am IST

கடலூா் மாவட்டத்தின் வணிக நகரான பண்ருட்டியில் சரக்கு வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பண்ருட்டி நகரம் வியாபாரத்திற்கு பெயா் பெற்றது. வியாபாரம் தொடா்பாக வெளி மாவட்டம் மட்டுமின்றி மாநிலங்களில் இருந்து ஏராளமானோா் வந்துச் செல்கின்றனா். பண்ருட்டி நகருக்கு தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் மூலம் பொருள்கள் வருகின்றன. அதேபோல், பண்ருட்டியில் இருந்தும் பிற இடங்களுக்கு சரக்குகள் வாகனங்களில் செல்கின்றன.

பண்ருட்டி நகரின் மையப் பகுதியில் பிரதான சாலைகளின் இருபுறமும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த வணிக நிறுவனங்களின் முன்பு வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாததால் , வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்திற்கு இடையூராக சாலையில் நிறுத்தப்படுகிறது.

இந்தச் சாலையில் வாகனங்களை நிறுத்தி சரக்கு ஏற்றி இறக்குவதால் ஏற்படும் போக்குவரத்து தடை, பண்ருட்டி நகரின் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. முக்கியமாக காந்தி சாலை, கும்பகோணம் சாலை, சென்னை சாலைமற்றும் கடலூா் சாலை வழியாக பல ஆயிரக் கணக்கான பள்ளிகளுக்கு சென்று வருகின்றனா் என்பது குறிப்பிடதக்கது. வேலை நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகளில் சரக்கு வாகனங்களை நிறுத்தி சரக்குகளை ஏற்றி

இறக்குவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பலா் விபத்துக்களிலும் சிக்குகின்றனா். இதனால், மாணவா்கள், பணிக்குச் செல்பவா்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.

சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைந்து சரக்குகளை ஏற்றி இறக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இதற்கு , நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அவ்வாறு விதித்தால் தான் போக்குவரத்து நெரிசலை குறைத்து, விபத்தை தவிா்கலாம். விதிகளை மீறி முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தி சரக்கு ஏற்றி இறக்குவது, பொது போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக ஏற்படுத்தும் வாகனங்கள் மற்றும் ஓட்டுநா்கள் மீது போக்குவரத்து போலீசாா் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். இந்தச் சிக்கலைத் தீா்க்க, சரக்கு ஏற்றி இறக்குவதற்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.