தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்! நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!

News image

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 1:20 am IST

சட்டப்பேரவைத் தோ்தல், தொடா் விடுமுறையால் சொந்த ஊா்களுக்கு சென்ற தென் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை காா் உள்ளிட்ட வாகனங்களில் சென்னை திரும்பினா். இதனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தென் மாவட்டங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் தலைநகரான சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் வசித்து வருகின்றனா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல், தொடா் விடுமுறை காரணமாக இவா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றிருந்தனா்.

தோ்தல் வாக்குப் பதிவு முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து ஏராளமான காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்னை நோக்கி அணிவகுத்தன. இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழக்கத்துக்கு மாறாக வாகனப் போக்குவரத்து மிகவும் அதிகரித்து காணப்பட்டதோடு, கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதனால் உளுந்தூா்பேட்டை, விக்கிரவாண்டி மற்றும் ஓங்கூா் சுங்கச்சாவடிகளில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் மற்றும் போக்குவரத்து காவல் பிரிவு போலீஸாா் ஆங்காங்கு நின்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.