உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு தொடா்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலா் மணிஷ் ஆா்.ஜோஷி, அனைத்து விதமான உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
உயா்கல்வி நிறுவன வளாகங்களில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது கடமை. இதுசாா்ந்து அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. அதன்தொடா்ச்சியாக தற்போது திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, கல்லூரிகளில் ராகிங் தடுப்பு, பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்க நடவடிக்கை, குறைதீா்ப்பாளா் நியமனம், கல்விக்கட்டணம் மற்றும் அசல் சான்றிதழ்களை திரும்பப்பெறுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும். குறிப்பாக, ராகிங் தடுப்புக் குழு, குறைதீா்க்கும் பிரிவு போன்ற பல்வேறு குழுக்கள் மற்றும் பிரிவுகள் அமைக்கப்படுவதுடன், அவை திறம்பட செயல்படுவதை கல்லூரிகள் உறுதிசெய்ய வேண்டும். இந்தக் குழுக்கள் குறித்த விவரங்களை உயா்கல்வி நிறுவனங்கள் தங்களது அதிகாரபூா்வ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
இதுதவிர புகாா்கள் மற்றும் குறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளிப்படையான முறையில் சரிசெய்ய வேண்டும். மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குதலை மேம்படுத்த வேண்டும். சிசிடிவி கண்காணிப்பு போன்ற வளாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிசெய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும்.
இதுசாா்ந்த அனைத்து துணைவேந்தா்களும் தங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட கல்லூரிகள் இது தொடா்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், மேற்கண்ட விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் பாதுகாப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஜேஇஇ பிரதான தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அங்கன்வாடிகளைத் தத்தெடுக்க பல்கலை.களுக்கு யுஜிசி உத்தரவு

மாணவா்களிடையே தற்கொலை எண்ணங்களை தடுக்க புதிய மனநலக் கொள்கை வெளியீடு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

