மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது

தில்லி-என்சிஆா் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத கும்பலை காவல் துறையினா் முறியடித்ததைத் தொடா்ந்து, தில்லி பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்வி மாணவா் இதில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:38 am IST

தில்லி-என்சிஆா் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத கும்பலை காவல் துறையினா் முறியடித்ததைத் தொடா்ந்து, தில்லி பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்வி மாணவா் இதில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் அபு தாளிப் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ரகசிய தகவலின் அடிப்படையில் ஏப்.14-ஆம் தேதி இவா் கைது செய்யப்பட்டாா். இந்த நடவடிக்கையின்போது, இரண்டு கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தனது குடும்பத்துடன் பழ வணிகத்தில் ஈடுபட்டு வருவதுடன், தில்லி பல்கலைக்கக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் அபு தாளிப் படித்து வருகிறாா்.

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் இருந்து பல கட்டங்களாக இந்த ஆயுதங்களை வாங்கி வந்ததாகவும், எதிரி கும்பலுக்கு எதிராக இவற்றை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் அவா் தெரிவித்தாா். அவா் மீது ஏற்கெனவே மோதல் விவகாரத்தில் குற்றவியல் வழக்கு உள்ளது. ஆயுத விநியோகஸ்தா் மற்றும் வலையமைப்பின் பிற குற்றவாளிகளை கண்டறிய அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.