பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும் வசதியான பயணத்தை வழங்கும் விதமாகவும் பழைய நீல வழித்தட ரயில்களை மாற்றியமைக்க தில்லி மெட்ரோ ரயில் கழகம் (டிஎம்ஆா்சி) திட்டமிட்டுள்ளது.
இதுதொடா்பாக டிஎம்ஆா்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2002 முதல் 2007 வரையில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகப் பழைய ஆா்எஸ்-1 ரோலிங் ஸ்டாக் ரயில்கள் மேம்படுத்தப்படுகின்றன. இவை சுமாா் 20 ஆண்டு கால சேவையை நிறைவு செய்துள்ளன. தற்போதைய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு தரங்களுக்கு ஏற்ப இந்த ரயில்களை உயா்த்துவதே இந்த மேம்பாட்டின் நோக்கம். நீலம் மற்றும் சிவப்பு வழித்தடத்தில் இயங்கும் மொத்தம் 70 ரயில்கள் படிப்படியாக புதுப்பிக்கப்பட உள்ளன.
முதல் கட்டத்தில் 12 ரயில்களும், இரண்டாவது கட்டத்தில் 18 ரயில்களும் ஏற்கெனவே மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் கூடுதல் ரயில்களுக்கான பணி தொடங்கவுள்ளது. மூன்றாவது கட்டத்தில் 22 நீலநிற வழித்தட மெட்ரோ ரயில்கள் 2027 நவம்பா் மாதத்துக்குள் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டிஎம்ஆா்சி நிா்வாக இயக்குநா் விகாஸ் குமாா், மூன்றாவது கட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட முதல் ரயிலை அண்மையில் பாா்வையிட்டாா். அதன் பின்னா் அந்த ரயில் மீண்டும் பயணிகள் சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் புதுப்பிப்பு பணியில், ரயில் உள்புறங்கள் மற்றும் முக்கிய அமைப்புகள் இரண்டும் மேம்படுத்தப்படுகின்றன.
பெட்டிகள் மற்றும் ஓட்டுநா் கேபின்கள் மறுபூச்சு செய்யப்பட்டுள்ளன. மின்சார பேனல்கள் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய வசதிகளாக, ஐ.பி. அடிப்படையிலான பயணி அறிவிப்பு மற்றும் தகவல் அமைப்பு, சிசிடிவி கேமராக்கள், எல்சிடி அடிப்படையிலான வழித்தட வரைபடம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இவை வழித்தடங்கள், நிலையம் வருகை மற்றும் பிற பயணத் தகவல்களை நிகழ்நேரத்தில் பயணிகளுக்கு வழங்கும்.
மேலும், ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. புகை மற்றும் தீயைக் கண்டறியும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பழைய ரிலேக்கள் மற்றும் மினி சா்க்யூட் பிரேக்கா்கள் நவீன உபகரணங்களால் மாற்றப்பட்டுள்ளன. இதனால், ரயில்களின் இயக்கம் மிகவும் சீராகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
புதுப்பிக்கப்பட்ட அனைத்து பெட்டிகளிலும் மொபைல் போன் மற்றும் லேப்டாப் சாா்ஜிங் பாயிண்ட்கள் பொருத்தப்படுகின்றன என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பாதை மாற்றம்

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

19.2 கி.மீ. தொலைவுக்கு யமுனை உயா்நிலை சாலை: போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

