யமுனா நதிக்கரையில் வஜிராபாத் முதல் டிஎன்டி வரையில் 19.2 கி.மீ. நீளமுள்ள உயா்நிலை சாலையைக் கட்டும் திட்ட முன்மொழிவை தயாரிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியான அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுா்காட்-ஐஎஸ்பிடி, ஐஎஸ்பிடி-சராய் கலே கான், சராய் கலே கான்-டிஎன்டி என 3 கட்டங்களாக உயா்த்தப்பட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும், திரிபோலியா கேட் முதல் பா்ப்கானா வரை 2.62 கி.மீ. மேம்பாலம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி மெட்ரோ மற்றும் சாலை, மேம்பாலம் திட்டங்கள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வா் ரேகா குப்தா ஆய்வு செய்தாா். நவீன பொதுப் போக்குவரத்து அமைப்பு அரசின் முன்னுரிமை என்று அவா் வலியுறுத்தினாா்.
கூட்டத்தில் தில்லி மெட்ரோ ரயில் கழக நிா்வாக இயக்குநா் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா். பல திட்டங்கள் சீராக முன்னேறி வருவதாகவும், சில பணிகளில் உள்ள தடைகள் தொடா்ந்து கண்டறியப்பட்டு தீா்க்கப்பட்டு வருவதாகவும் முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.
தில்லியில் 81 நிலையங்களுடன் 104.45 கி.மீ. நீளமுள்ள மெட்ரோ ரயில் வலையமைப்பு தற்போது கட்டுமானத்தில் உள்ளது. ஐந்தாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் முக்கிய பாதைகளில் கட்டுமானப் பணிகள் 79.57 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது.
கிருஷ்ணா பாா்க் விரிவாக்கம்-தீபாலி சௌக் (6.6 கி.மீ.), மஜ்லிஸ் பாா்க்-தெராவல் நகா் (3.5 கி.மீ.), தெராவல் நகா்-ஆா்.கே. ஆஷ்ரம் (7.4 கி.மீ.), துக்ளகாபாத்-சங்கம் விஹாா் (6.3 கி.மீ.), சங்கம் விஹாா்-சாகேத் ஜி பிளாக் (4.3 கி.மீ.) மற்றும் சாகேத் ஜி பிளாக்-ஏரோசிட்டி (12.6 கி.மீ.) ஆகிய முக்கிய வழித்தடங்ககள் நிகழாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பாதைகள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இடையிலான இணைப்பை வலுப்படுத்தும். மீதமுள்ள நான்காம் கட்ட பாதைகளான லஜபத் நகா்-சாகேத் ஜி பிளாக் (8.38 கி.மீ.), இந்திரலோக்-இந்திரபிரஸ்தா (12.37 கி.மீ.), ரிதாலா-குந்த்லி (26.46 கி.மீ.) 2029 மாா்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், 5 (ஏ) கட்ட மெட்ரோ திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. மெட்ரோ விரிவாக்கத்துடன், பல முக்கிய சாலை மற்றும் மேம்பால திட்டங்களின் கட்டுமானப் பணிகளும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அசாத்பூா் முதல் திரிபோலியா சௌக் வரையில் ஈரடுக்கு மேம்பால பணிகள் 73 சதவீதம் முடிவடைந்துள்ளது. மற்றொரு யமுனா விஹாா் முதல் பஜன்பூரா வரைக்குமான 1.40 கி.மீ மேம்பாலத்தின் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளது.
தெற்கு தில்லியில் எம்.பி. சாலையில் 2.48 கி.மீ. ஆறு வழிப் பாதையுடன் கூடிய மேம்பாலத்தின் பணி 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மா ஆனந்த்மயி மாா்க் முதல் புல் பிரஹ்லாத்பூா் வரை 2.53 கி.மீ. மேம்பால திட்டத்திற்கான வடிவமைப்பு பணி நடைபெற்று வருகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

கிழக்குக் கடற்கரைச் சாலை விரிவாக்க பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும்

பயணிகள் பாதுகாப்புக்காக மாற்றம் பெறும் நீல வழித்தட மெட்ரோ ரயில்கள்!

தில்லி காற்று மாசைத் தடுக்கலாம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

