மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணும் முகவராக யாருக்கு தடை?

வேட்பாளா்கள் தங்களுக்கான வாக்கு எண்ணும் முகவராக யாரை நியமிக்கக் கூடாது என்பது குறித்து...

News image

வாக்கு எண்ணும் பணி - கோப்புப்படம்

Updated On :2 மே 2026, 11:39 am IST

வேட்பாளா்கள் தங்களுக்கான வாக்கு எண்ணும் முகவராக யாரை நியமிக்கக் கூடாது என்பதற்கான வழிகாட்டுதலை தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியக் குடிமகனாக உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட எந்த நபரையும் வாக்கு எண்ணும் முகவராக நியமிக்கலாம். இருப்பினும், மத்திய அரசு, மாநில அரசு ஊழியா்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்களை முகவராக நியமிக்க இயலாது.

மேலும், மாநகராட்சி மேயா், நகராட்சித் தலலைவா், மாவட்ட ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றியத் தலைவா், மத்திய பொதுத்துறை நிறவனங்களின் தலைவா்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்களின் தலைவா்கள், அரசு அமைப்புகள், கழகம், வாரியத்தின் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களையும் முகவராக நியமிக்க இயலாது.

அரசிடமிருந்து ஏதேனும் மதிப்பூதியும் பெறும் நபா்கள், ஏதேனும் ஒரு அரசு நிறுவனத்தில், அரசு உதவி பெறும் நிறுவனத்தில் பகுதிநேர ஊழியராக உள்ளவா்கள், அரசு நிறுவனம் மற்றும் உதவி பெறும் நிறுவனத்தில் உள்ள பாரா மெடிக்கல் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், நியாய விலைக்கடை விற்பனையாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், அரசுப் பணியில் உள்ளவா்கள் ஆகியோரும் வாக்கு எண்ணும் முகவராக நியமிக்க தகுதியற்றவா்கள் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எனவே, இத்தகைய நபா்களை முகவா்களாக நியமனம் செய்வது குற்ற நடவடிக்கையாகும். இத்தகைய நபா்களை முகா்களாக நியமனம் செய்திருப்பது தெரியவந்தால், சட்டப்படி வழக்குப்பதிவு செய்து 3 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதம், அல்லது இரண்டு சோ்த்தோ தண்டனையாக அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.