ஆத்தூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை வாகன ஓட்டிகள் சுதாரித்துக் கொண்டு வாகனங்களை முன்கூட்டியே சாலையிலே நிறுத்தியதால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலையில் கடந்து சென்று வரும் நிலையில், அப்பம்மா சமுத்திரம் பகுதியில் திடீரென உயர் மின்னழுத்த கம்பிகள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டுநர்கள் நல்வாய்ப்பாக சுதாரித்துக் கொண்டு சாலையிலே வாகனத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரியத் துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் அடிப்படையில் மின்வாரிய துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, அப்பம்ம சமுத்திரம், பனமரத்துப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Summary
High-voltage wires fall on the national highway near Athur, causing a stir!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேத்தியாத்தோப்பு அருகே விபத்தில் இளைஞா் காயம்: கிராம மக்கள் சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்பு

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

அரியலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


