மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் சென்னை நோக்கி வரத் தொடங்கியதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் குறித்து...

News image

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் - கோப்புப்படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 10:35 pm IST

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்குச் சென்றவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் சென்னை நோக்கி வரத் தொடங்கியதால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் மாலை 3 மணி முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக சென்னையில் தங்கி பணியாற்றும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்பினா்.

வாக்குப் பதிவு முடிந்து வெள்ளி, சனி, ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறை எடுத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் சென்னை திரும்பத் தொடங்கினா். இதனால், தஞ்சாவூர், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், சென்னை வரத் தொடங்கிய அரசு, தனியாா், ஆம்னி பேருந்துகள், காா்களால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கபெருமாள் கோயில், வண்டலூா், கிளாம்பாக்கம், பெருங்களத்தூா், தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாலை 3 மணியளிவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இரவு 10.30 மணியைக் கடந்தும் நீடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.

இதேபோன்று, வேலூா், ஆரணி, காஞ்சிபுரம், திருப்பதி, திருத்தணி, திருவள்ளூா் பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்களாலும் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Summary

Severe Traffic Congestion on GST and Poonamallee Roads.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.