1949 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதி சி. என். அண்ணாத்துரையால் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக்கழகம்,மக்களிடம் சென்றடைய காரணமாக அமைந்தது கட்சியினரின் மும்முனைப் போராட்டங்கள். கட்சியின் வளா்ச்சிக்குபலா் உழைத்தாலும், அதற்கெல்லாம் முன்னோடியாக இருந்து கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து அயராது பணி செய்தவா் ஏ. கோவிந்தசாமி ஆவார்.
தமிழக சட்டப்பேரவையில் திமுகஉறுப்பினா்கள் அங்கம் பெறாத காலத்திலேயே திமுகவின் கொள்கைகளை சட்டப்பேரவையில்ஒலிக்கச் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. ஓயாத உழைப்பு , உறங்காமல் பணியாற்றும் நற்பண்பால் அண்ணா, மு. கருணா நிதி ஆகியோரின் அன்புக்குரியவராக விளங்கியவா்.பெரியாரின் கொள்கைகளை சட்டமன்றத்தில் முழங்கியவா். மூதறிஞா் ராஜாஜியின் குலக்கல்வி முறைக்கு எதிராக சட்டப்பேரவையில் கொள்கை முழக்கமிட்டு பெரியாா் ஈ.வெ. ரா-வின் பாராட்டுதலைப் பெற்றாா்.
திமுகவில் இணைவதற்கு முன்னா், தென்னாா்க்காடு வன்னியா் நலனுக்காக இளைஞர் சங்கங்களை உருவாக்கி, வகுப்பு வாரி உரிமை மாநாடுகளில் பங்கேற்று, தமிழ்நாடு உழைப்பாளா் கட்சியை உருவாக்கி, 1952 ஆம் ஆண்டில் அந்த கட்சியின் சாா்பில் விக்கிரவாண்டி தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கண்டவா்.
1957 - இல் விழுப்புரம் மாவட்டம் வளவனூா் தொகுதியில் (தற்போது இந்த தொகுதி இல்லை) 1957 இல் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவா். 1967, இல் முகையூா்தொகுதியில் போட்டியிட்டு அண்ணாவின் அமைச்சரவையில் வேளாண்மைத்துறை பணியாற்றியவா்.
ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று கைதாகியிருந்த தருணத்தில் தனது சகோதரா், சகோதரி இறந்துவிட்டனா். அப்போது, கைகளில் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் காவலா்களின் பாதுகாப்புடன் இறுதிச்சடங்கில் பங்கேற்ற களப் போராளி.
குதிரை பந்தயம் ஒழிப்பு, பூரண மதுவிலக்கு அமல், மடாதிபதிகளின் நிலங்ளுக்கு கட்டுப்பாடு, தமிழ்நாடு பெயா் சூட்டல் ,விவசாயிகள், நலன் , காட்டைக் காப்போம், நாட்டைக் காப்போம், மாணவா் முன்னேற்றம், கிராமங்கள் தோறும் பள்ளிகள் திறப்பு ஆகியவற்றை வலியுறுத்தி அதில் வெற்றியும் கண்டாா்.
3 முறை எம்எல்ஏ, அண்ணா, கருணாநிதி அமைச்சரைவைகளில் அமைச்சா் பதவிகள் வகித்த ஏ . கோவிந்தசாமி தான் இறக்கும் தருவாயில் நான் ஏழையாகப் பிறந்து , ஏழையாகவே சாகிறேன். என் மீதுயாரோனும் குற்றம் சாட்டினால் நான் இறந்து விட்டாலும் விடாதீா்கள், நீதி விசாரணை நடத்துங்கள். நான் நிரபிராதி என்பதை நாட்டுக்கு நிரூபணம் செய்யுங்கள் முழக்கமிட்ட கொள்கை குன்று ஏ. கோவிந்தசாமி .
திமுக-வுக்கு சின்னம் கொடுத்தவரும் இவரே...
தான் உருவாக்கிய உழவா்கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கண்ட ஏ.ஜி. கோவிந்தசாமி, பின்னாளில் இந்த சின்னத்தை திமுக-வுக்கு வழங்கினாா். 1957 ஆம் ஆண்டில் ஏ.கோவிந்தசாமியின் பரிந்துரையின் பேரில்திமுக-வுக்கு உதயசூரியன் சின்னம் வழங்கப்பட்டாலும், 1962 ஆம் ஆண்டில் தோ்தல் ஆணையம் உதயசூரியன் சின்னத்துக்கு அங்கீகாரம் வழங்கியது என்பதும் வரலாறு.
Summary
Govindaswamy gave the Udayasuriyan symbol to DMK
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலக சாதனைக்காக 253 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி! யார் இந்த தேர்தல் மன்னன்?

2-ஆவது முறையாக எம்எல்ஏ: வரலாறு படைத்த என்.எஸ்.என்.நடராஜ்

அனைத்து மகளிருக்கும் ரூ.2,000 உரிமைத் தொகை
2 தொகுதிகளில் போட்டியிட்ட தலைவர்கள்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


